திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 மாஸ் டயலாக்...ஒரே நாளில் பிரபலமான மணமக்கள்

பெங்களூரு : திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 படத்தின் பிரபலமான மாஸ் டயலாக்கை அச்சடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் கர்நாடகாவை சேர்ந்த மணமக்கள். இதனால் ஒரே நாளில் அவர்கள் செம பாப்புலர் ஆகி விட்டனர்.

ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படம். இந்த படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக வசூலில் புதிய சாதனையே படைத்து வருகிறது. Hombale Films பேனரில் உருவாக்கப்பட்ட இந்த படம் 2018 ல் வெளியான பிளாக் பஸ்டர் படமான கேஜிஎஃப் சாப்டர் 1 ன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 வசூல் சாதனை

கேஜிஎஃப் 2 வசூல் சாதனை

பான் இந்தியன் படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட கேஜிஎஃப் 2 படம் ரிலீசான 7 நாட்களில் 715 கோடிகளை வசூல் செய்து இதுவரை எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் 1000 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிகம் வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 2, 7வது இடத்தில் உள்ளது. விரைவில் முதல் இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ரசிகர்கள் கொண்டாடும் கேஜிஎஃப் 2

ரசிகர்கள் கொண்டாடும் கேஜிஎஃப் 2

ஒட்டுமொத்த நாடே தற்போது கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றியை தான் கொண்டாடி வருகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மாஸ் டயலாக் ஆகியவை தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. திரை தீப்பிடிக்கும் மாஸ் டயலாக்குகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

Recommended Video

Beast VS KGF 2 | Box Office Collection | Filmibeat tamil
கேஜிஎஃப் 2 மாஸ் டயலாக்

கேஜிஎஃப் 2 மாஸ் டயலாக்

ரசிகர்களை கேஜிஎஃப் 2 பட டயலாக்குகள் எந்த அளவிற்கு கவர்ந்துள்ளது என்பதற்கு சாட்சியாக ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 படத்தில் இடம்பெற்ற பிரபலமான மாஸ் டயலாக்கை அச்சிட்டுள்ளார். படத்தில் யாஷ் பேசும் பிரபல டயலாக்குகளில் ஒன்று, Violence, violence, violence...I don't like violence. But violence liked me. So i can't avoid it. படத்தின் டிரைலரிலேயே இடம் பெற்ற இந்த டயலாக் பலருக்கும் பிடித்த டயலாக் ஆனது.

திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 டயலாக்

திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 டயலாக்

கர்நாடகாவை சேர்ந்த ரசிகர் ஒருவருக்கு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர் தனது திருமண பத்திரிக்கையில் கேஜிஎஃப் 2 வில் இந்த டயலாக்கை மாற்றி, Marriage, marrriage, marriage. I don't like it. I avoid. But my relatives like marriage. So I can't avoid என அச்சிட்டுள்ளார். இந்த திருமண அழைப்பிதழின் போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி, வைரலாகி வருகிறது. பலருக்கும் ரசிகர்களின் இந்த செயல் சிரிப்பை ஏற்படுத்தினாலும், சோஷியல் மீடியாவில் மணமக்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X