புனித் ராஜ்குமாரின் நினைவுடன் நடந்த கேஜிஎஃப் 2 டிரைலர் வெளியீடு

பெங்களூரு : ராக் ஸ்டார் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் மிரட்டலான டிரைலர், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் நினைவுடன் உணர்ச்சி பூர்வமாக நடைபெற்றது.

2018 ல் வெளியான வசூல் சாதனை படைத்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ளது கேஜிஎஃப் சாப்டர் 2. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி உள்ள 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் ராக் ஸ்டார் யஷ் லீட் ரோலில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

புனித் ராஜ்குமாருக்கு நினைவஞ்சலி

புனித் ராஜ்குமாருக்கு நினைவஞ்சலி

ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாக உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் இன்று மாலை நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் டைரக்டர் கரண் ஜோகர் கலந்து கொண்டார். முதலில் பேசிய கரண் ஜோகர், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்தார்.

ஆக்ஷன் ஆரம்பம்

ஆக்ஷன் ஆரம்பம்

புனித் ராஜ்குமார் உண்மையான ஹீரோ என கூறி, அவரது சாதனைகள் பற்றி பேசிய கரண் ஜோகர், அவரது மறைவு இந்திய சினிமாவிற்கு பேரிழப்பு என்றார். பிறகு அனைவரையும் எழுந்து நின்று புனித் ராஜ்குமாருக்கு மெளன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். புனித் ராஜ்குமாரை நினைவு கூறும் பாடலும் பாடப்பட்டது. தொடர்ந்து ஆக்ஷன் துவங்கியது என சொல்லி கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் வெளியிட்டார்.

கட்டிப்பிடித்து வாழ்த்திய பிரபலங்கள்

கட்டிப்பிடித்து வாழ்த்திய பிரபலங்கள்

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றை தொடர்ந்து இந்தியிலும் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் விசில் பறக்க, அரங்கம் அதிர, கேஜிஎஃப் 2 டிரைலர் திரையிடப்பட்டது. டிரைலரை பார்த்து விட்டு மாளவிகா, ரவீணா, ப்ருத்விராஜ் உள்ளிட்டோர் யாஷை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய சினிமா மறக்க முடியாத படம்

இந்திய சினிமா மறக்க முடியாத படம்

கேரளாவில் கேஜிஎஃப் 2 படத்தை விநியோகம் செய்யும் உரிமத்தை பெற்றுள்ள நடிகர் ப்ருத்விராஜ், பாகுபலி 1 மற்றும் 2, கேஜிஎஃப் 1 மற்றும் 2 ஆகியன இந்திய சினிமாவால் மறக்க முடியாத படங்கள். எஸ்.எஸ்.ராஜமெளலியும், பிரஷாந்த் ஆகியோர் இந்திய சினிமா உலகின் தூண்கள் என பாராட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X