»   »  கான் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு... டிவிட்டரில் கொண்டாடிய சிம்பு ரசிகர்கள்!!

கான் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு... டிவிட்டரில் கொண்டாடிய சிம்பு ரசிகர்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிம்பு ரசிகர்கள் இரவு முழுவதும் அதனை டிவிட்டரில் பதிவிட்டு டிரண்ட் செய்தனர்.

இயக்குநர் செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்புவுடன் கேத்ரீன் தெரஸா, டாப்ஸி ஆகியோரும் நடிக்கின்றனர். சிம்பு முருக பக்தராக நடிக்கிறார். டாப்ஸிக்கு போலீஸ் வேடம். படத்தின் முக்கிய காட்சிகள் காட்டுக்குள் படமாக்கப்படவுள்ளன.


ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அடுத்ததாக கெளதம் மேனன் படத்தில் பணியாற்றவுள்ளார் சிம்பு. கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செல்வராகவன் இயக்கத்தில்

செல்வராகவன் இயக்கத்தில்

இயக்குனர் செல்வராகவன் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து இயக்குகிறார், இவர் இயக்கிய இரண்டாம் உலகம் ரசிகர்களிடேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் தற்போது இந்த படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்,


பட ரிலீஸ் எப்போ?

பட ரிலீஸ் எப்போ?

சிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், என வரிசையாக ரிலீசாகின்றன. ஆனால் படங்கள்தான் ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை.


மூன்று ஹீரோயின்கள்?

மூன்று ஹீரோயின்கள்?

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் வந்துள்ளது. சிம்புவிற்கு ஜோடியாக கேத்தரின் மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கிறார். இப்படத்தில் டாப்சி ஒரு தைரியமான கவர்ச்சியான பாத்திரத்தில் நடிக்கிறாராம்.


டிவிட்டரில் ரசிகர்கள்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அறிவிக்கப்பட்ட உடன் அதனை டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கினர் சிம்பு ரசிகர்கள்.


அஜீத் ரசிகர்களும்

கான் படத்தைப் பற்றி அஜீத் ரசிகர்களும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இது விஜய் நடித்த ‘புலி' பட ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்புக்குப் போட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.


முந்தியது புலி

என்னதான் சிம்பு ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் போட்டி போட்டு ட்விட்டினாலும் முந்தியது என்னவோ புலிதான். இதை ஹன்சிகாவே ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். சபாஷ் சரியான போட்டிதான்.


English summary
Simbu-Selvaragavan’s next movie KAAN’s first poster is unveiled in the social networks tomorrow – 17th June.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil