»   »  அட்டகாசம்.. "ஸ்டன்" ஆயிட்டேன்.. உத்தமவில்லன் குறித்து குஷ்பு சந்தோஷ ரியாக்ஷன்!

அட்டகாசம்.. "ஸ்டன்" ஆயிட்டேன்.. உத்தமவில்லன் குறித்து குஷ்பு சந்தோஷ ரியாக்ஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தமவில்லன் படம் குறித்து மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

உத்தம வில்லன் இன்று திரைக்கு வருகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே அந்தப் படத்தை சிலர் பார்த்துள்ளனர். அந்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் நடிகை குஷ்பு. உத்தமவில்லன் குறித்து அவர் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.அதில் படம் அட்டகாசமாக இருப்பதாகவும், பார்த்ததும் ஸ்டன் ஆகி விட்டதாகவும் கூறியுள்ளார் குஷ்பு. கமல்ஹாசனுடன் சேர்ந்து இந்தப் படத்தை விசேஷமாக சிலருக்கு காட்டினர். அந்தக் காட்சியில் குஷ்புவும் கலந்து கொண்டார்.


"கமல்சாருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. விஷவல்களைப் பார்த்து ஸ்டன் ஆகி விட்டேன். வசனம், நடனம்.. எல்லாமே பிரமாதம்" என்று ஒரு டிவிட்டில் கூறியுள்ளார் குஷ்பு.


இன்னொரு டுவிட்டில் தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தை இதுவரை கண்டதில்லை. மனசை உலுக்கும் படம் உத்தமவில்லன் என்று கூறியுள்ளார்.


மற்றொரு டிவிட்டில், கமல்ஹாசனை ஏன் மாஸ்டர் என்று சொல்கிறோம் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். ஒவ்வொரு காட்சியைப் பார்த்தாலே தெரிகிறது. பிரேமுக்கு பிரேம் திரையை ஜொலிக்க வைக்கிறார் கமல். அவரது கண்கள் அவ்வளவு பேசுகின்றன என்று கூறியுள்ளார் குஷ்பு.


"நாசர், பூஜா குமார், ஊர்வசி, ஆண்ட்ரியா, எம்.எஸ்.பாஸ்கர் எல்லோருமே பிரமாதக நடித்துள்ளனர். இதுவரை கொடுத்திராத நடிப்பை இதில் கொடுத்துள்ளனர்" என்கிறது இன்னொரு டிவிட்.


"மறைந்த கேபி சார் தனது நடிப்பால் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறார். படம் பார்த்தபோது நான் அழுதபடி பார்த்தேன்"


"படத்தின் கடைசிக் காட்சியைப் பார்த்து முடித்ததும் நான் கமல் சார் காலைத் தொட்டு வணங்கினேன். என்னுடைய சூப்பர்ஹீரோ கமல்ஹாசன்.. என்று புகழாம் சூட்டியுள்ளார் குஷ்பு.


English summary
Kushboo took to her Twitter handle to share the excitement of watching the movie. She recalled that she was so stunned by the visuals, dialogues, and performances in the movie that she went and touched Ulaganayagan's feet at the end of the show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil