»   »  ட்விட்டரில் மோசமாக பேசிய ரசிகர்கள்: மல்லுக்குப் பாய்ந்த குஷ்பு

ட்விட்டரில் மோசமாக பேசிய ரசிகர்கள்: மல்லுக்குப் பாய்ந்த குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் தன்னை மோசமாக பேசியவர்களுக்கு நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பதில் அளித்துள்ளார்.

தான் மும்பைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கும்பலின் கையில் சென்றுவிட்டதாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அதை பார்த்த பலரும் கமெண்ட் போட்டனர்.

மாபியா

குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் மட்டும், நீயே கொஞ்ச நாள் முன்னாடி பெரிய மாபியா வசம் தான் இருந்த என்று ட்வீட்டியிருந்தார்.

சொல்லு ப்ரோ

மரியாதை இல்லாமல் ட்வீட்டிய நபருக்கு குஷ்பு பதில் அளித்துள்ளார். குஷ்பு தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது, அந்த மாபியா நீயா அல்லது உன் மொத்த குடும்பமா?? சொல்லு ப்ரோ என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்மைலி

தமிழக சூழல் தனக்கு வருத்தம் அளிப்பதால் இன்று ஸ்மைலி பயன்படுத்த மாட்டேன். இந்த காலை மகிழ்ச்சியான காலையாக இருக்க முடியாது என்று குஷ்பு ட்வீட்டியிருந்ததற்கு ஒருவர், நீ பர்ஸ்ட் ஒரு கட்சியில இரு அப்புறமா பேசு. முதலில் திமுக, இப்போ காங்கிரஸ், அடுத்து பாஜகவா. உன்ன மாதிரி அரசியல் செஞ்சா இப்புடித்தான் என்று கமெண்ட் போட்டார்.

கட்சி

நியாயம் பேசுறதுக்கு கட்சி தேவை இல்லை. உன்ன மாதிரி ஆளுங்களால்தான் தமிழகத்திலே பிரச்சனை.. ஜால்ரா போடுறது நிறுத்திட்டு கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்க என பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு.

English summary
Actress turned politician Khushbu Sundar has given reply to those who tweeted ill of her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil