மறக்க முடியாத காதல் நினைவுகள்...அன்ஸீன் ஃபோட்டோக்களை வெளியிட்ட குஷ்பு
சென்னை : 1988 ல் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் குஷ்பு. தற்போது வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு.
2000 ல் முறைமாமன் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் டைரக்டர் சுந்தர்.சி.,யை காதலித்து, அவரையே திருமணம் செய்து கொண்டார். தற்போது அரசியல், நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் குஷ்பு, ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தேர்தல் காரணமாக நடிப்பிற்கு கேப் விட்ட குஷ்பு, லாக்டவுன் முடிந்ததும் அண்ணாத்த படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடிக்க துவங்க உள்ளார்.

காதலை வெளியிட தவறியதில்லை
சுந்தர்.சி உடனான தனது காதலை அவ்வப்போது பகிர்ந்து வருபவர் குஷ்பு. சுந்தர்.சி தன்னிடம் காதலை சொன்ன தினம், தங்களின் திருமண நாள், சுந்தர்.சி.,யின் பிறந்தநாள், காதலர் தினம் என ஒவ்வொன்றிற்கும் சுந்தர்.சி உடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை வெளியிட்டு, தங்களுக்குள் இருக்கும் காதலை அழகாக சமூக வலைதளங்களில் பதிவிடுவார் குஷ்பு.

சமூக வலைதளங்களில் பிஸி
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் குஷ்பு. தேர்தலுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் குஷ்பு, சுந்தர்.சி.,யுடனும், தனது மகள்களுடனும் எடுத்துக் கொள்ளும் ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

3 ஃபோட்டோக்களில் குவியும் லைக்குகள்
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, திருமணத்திற்கு முன்பும், பிறகும் சுந்தர்.சி.,யுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார். இவரது பழைய ஃபோட்டோக்களை ரசிப்பதற்கென்று தனிக்கூட்டமே உள்ளது.

மலரும் நினைவுகள்
அப்படி நேற்று சில ஃபோட்டோக்களை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு முன் காதலிக்கும் போது, திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்த போது, தற்போது என 3 காலகட்டங்களில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை குஷ்பு வெளியிட்டுள்ளார்.

காதலை அழகாக சொன்ன குஷ்பு
அத்துடன், 1995 ல் காதலில் விழுந்தோம். 2000 ல் எங்களின் குடும்ப வாழ்க்கையை துவக்கினோம். 2020 ல் எங்கள் பிள்ளைகளுடன் நாங்களும் வளர்ந்தோம். காலம் மாறியது. ஆனால் நாங்கள் அப்படியே இருக்கிறோம். தற்போது குழந்தைகள் எங்களை கவனித்து கொள்கிறார்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

குவியும் வாழ்த்துக்கள்
ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் என பலரும் குஷ்புவின் இந்த பதிவை கொண்டாடி வருகின்றனர். சினிமா செட்டில் எடுத்தது முதல் தற்போது தனது மகள்கள் அவந்திகா மற்று அனந்திகா உடன் எடுத்துக் கொண்ட 3 ஃபோட்டோக்களின் வாழ்க்கை நினைவுகளை அழகாக குஷ்பு கூறி உள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











