என்ன சொல்றீங்க.. கடைசி நேரத்தில் தள்ளிப் போனதா ஷங்கர் பட ஹீரோயின் திருமணம்.. ஷாக்கான ரசிகர்கள்!
மும்பை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் ஆர்சி15 படத்தில் ஜோடியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் திருமணத்துக்காக ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சால்மர் அரண்மனைக்கு படையெடுத்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கியாரா அத்வானி காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரம்மாண்டமான முறையில் ராயல் வெட்டிங்கை நடத்த உள்ளனர்.
இந்நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக திருமணம் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வைப்ரேட்டர் சீன் ஞாபகமிருக்கா
லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் வைப்ரேட்டரை பயன்படுத்தும் போல்டான காட்சியில் நடித்து சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. 2014ல் இந்தியில் வெளியான ஃபக்லி படத்தில் அறிமுகமானாலும் அடுத்து வெளியான எம்.எஸ். தோனியின் பயோபிக் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக சாக்ஷி தோனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கியாரா அத்வானி.

மகேஷ் பாபுவுக்கு ஜோடி
பாலிவுட் படங்களில் நடித்து வந்த கியாரா அத்வானி 2018ல் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான டோலிவுட் படமான பரத் எனும் நான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். 2019ல் ராம்சரணுக்கு ஜோடியாக வினய விதய ராமா படத்தில் நடித்த கியாரா அத்வானி மீண்டும் ராம்சரணுக்கு ஜோடியாக ஷங்கர் இயக்கத்தில் அர்சி15 படத்தில் நடித்து வருகிறார்.

ஷங்கர் பட ஹீரோயின்
பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக நடித்து வரும் கியாரா அத்வானியை இயக்குநர் ஷங்கர் ராம்சரண் படத்துக்கு அடுத்து அவர் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து இயக்கப் போகும் அந்நியன் ஹிந்தி ரீமேக்கிற்கும் புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சித்தார்த் மல்ஹோத்ராவுடன் காதல்
இயக்குநர் விஸ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான ஷேர்ஷா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், கடைசி வரை இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்கிற தகவல் பரவிய போது கூட எனக்கே சொல்லல திருமணம் எல்லாம் செய்யப் போறது இல்லை எனக் கூறி இருந்தார். இந்நிலையில், திருமணத்துக்காக ஜெய்சல்மாரில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி சென்றுள்ளனர்.

பிரம்மாண்ட திருமணம்
ஜெய்சல்மாரில் பிப்ரவரி 6ம் தேதி பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் ஜெய்சல்மாருக்கு வருகை தந்து வருகின்றனர். அம்பானி குடும்பமும் அங்கே வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமண தேதியில் மாற்றம்
இந்நிலையில், கடைசி நேரத்தில் பிப்ரவரி 6ம் தேதி திருமணம் இல்லை என்றும் பிப்ரவரி 7ம் தேதி தான் கியாரா அத்வானி திருமணம் நடைபெற உள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மெகந்தி நிகழ்ச்சியும் நாளை சங்கீத் நிகழ்ச்சியும் நடக்கும் என்றும் நாளை மறுநாள் தான் கியாரா அத்வானி கழுத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா தாலி கட்டுவார் எனக் கூறுகின்றனர். ஆனால், இதுவரை இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











