30வது பிறந்தநாளை காதலருடன் துபாயில் கொண்டாடிய கியாரா அத்வானி.. மாவீரன் படத்தில் நடிக்கிறாரா?
சென்னை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை கியாரா அத்வானி இன்று தனது 30வது பிறந்தநாளை துபாயில் தனது காதலருடன் கொண்டாடி வருகிறார்.
எம்.எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ், பரத் எனும் நான், லக்ஷ்மி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கியாரா அத்வானி.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார் கியாரா அத்வானி.

30வது பிறந்தநாள்
பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை கியாரா அத்வானி இன்று தனது 30வது பிறந்தநாளை துபாயில் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் நடிகை கியாரா அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அவரது படு கவர்ச்சியான போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

காதலருடன் துபாயில்
பாலிவுட் நடிகரும் காதலருமான சித்தார்த் மல்கோத்ராவுடன் நடிகை கியாரா அத்வானி தனது 30வது பிறந்தநாளை துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி வருகிறார். திஷா பதானி மற்றும் டைகர் ஷெராஃப் இடையே சமீபத்தில் பிரேக்கப் ஆன நிலையில், கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா தங்களது உறவை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி உள்ளனர். கூடிய சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஷங்கர் படம்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. ஏற்கனவே டோலிவுட்டில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பரத் எனும் நான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா
விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட், வாரிசு படங்களிலேயே கியாரா அத்வானி தான் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தளபதி 67 படத்தில் கூட அவர் நடிக்கப் போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கப் போவதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











