»   »  ரூ. 74 கோடி நகைகள் திருட்டு: பாரீஸுக்கு பெரிய கும்பிடு போட்டு கிளம்பிய நடிகை கிம்

ரூ. 74 கோடி நகைகள் திருட்டு: பாரீஸுக்கு பெரிய கும்பிடு போட்டு கிளம்பிய நடிகை கிம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பாரீஸில் உள்ள ஹோட்டலில் துப்பாக்கி முனையில் ரூ.74 கோடி மதிப்புள்ள நகைகளை பறிகொடுத்த அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் உடனே ஊரை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

அமெரிக்காவில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் கிம் கர்தாஷியன். அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

இந்நிலையில் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் ஃபேஷன் ஷோவை காண அங்கு சென்றார்.

திருட்டு

திருட்டு

பாரீஸில் கிம் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் 5 முகமூடி திருடர்கள் போலீஸ் உடையில் இன்று அதிகாலை நுழைந்தனர். அவர்கள் கிம்மின் அறைக்குள் புகுந்து துப்பாக்கிமுனையில் ரூ.74 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.

நிச்சயதார்த்த மோதிரம்

நிச்சயதார்த்த மோதிரம்

கிம் பறிகொடுத்த நகைகளில் விலை உயர்ந்த கல் பதிக்கப்பட்ட அவரது நிச்சயதார்த்த மோதிரமும் அடக்கம். மேலும் அவரின் விலை உயர்ந்த 2 ஸ்மார்ட்போன்களும் திருடுபோயுள்ளன.

பாரீஸே வேண்டாம்

பாரீஸே வேண்டாம்

துப்பாக்கி முனையில் நகைகளை பறிகொடுத்த கிம் முதல் வேலையாக பாரீஸில் இருந்து கிளம்பி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டாராம். அவர் தனி விமானம் மூலம் அமெரிக்கா கிளம்பியுள்ளார்.

முடியுமா?

முடியுமா?

என் பாடிகார்டு பாஸ்கல் டுவியர் தான் உலகிலேயே சிறந்த பாதுகாவலர் என கிம் கர்தாஷியன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். கிம்மிடம் இருந்து நகைகள் திருடப்பட்டபோது பாஸ்கல் ஹோட்டலில் இல்லையாம்.

English summary
American TV reality star Kim Kardashian has left Paris by a special plane after she was robbed at gunpoint in her hotel room.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil