உதயநிதி காதலை சொன்ன போது முதலில் ‘நோ‘ சொல்லிட்டேன்..கிருத்திகா பகிர்ந்த சுவாரசியம்!
சென்னை : உதயநிதி காதலை சொன்ன போது 'நோ' சொல்லிவிட்டேன் என்று கிருத்திகா உதயநிதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Recommended Video
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
அந்தப் படத்தில் சிவா, பிரியா ஆனந்த், சந்தானம், ராகுல் ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன.

வணக்கம் சென்னை
வணக்கம் சென்னை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கிருத்திகா விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். வித்தியாசமான கதை களத்தைக் கொண்ட இந்த திரைப்படத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான காளி படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார்.

பேப்பர் ராக்கெட்
தற்போது, கிருத்திகா இயக்கியுள்ள பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் காளிதாஸ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தரன் குமார் இசையமைத்துள்ள இந்தத் தொடரின் பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

27 வருட காதல்
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது கணவர் உதயநிதியுடன் கிருத்திகா பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தங்கள் காதல் குறித்து பல தகவல்களை இருவரும் ஜாலியாக பகிர்ந்து கொண்டனர். இதில், எங்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் அதற்கு முன் ஒரு 7 வருடம் இருவரும் காதலித்தோம் மொத்தம் 27 ஆண்டுகள் எங்கள் உறவு இருக்கிறது என்றனர்.

முதலில் நோ சொன்னேன்
மேலும், உதயநிதி முதலில் என்னிடம் காதலை சொன்ன போது வேண்டாம் என்று கூறிவிட்டார்.ஏன் என்றால், அரசியல் குடும்பம் என்பதால் பயமாக இருந்தது. அதனால் செட்டாகாது என்று கூறிவிட்டேன். அதன் பிறகு எப்படியோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு என் மனதை மாற்றிவிட்டார் . அப்புறம் காதல், கல்யாணம் குழந்தைகள் என்று இப்படியே வாழ்க்கை செட்டாகிவிட்டது என்று தங்களது காதல் 27 வருட காதல் குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டனர். இத்தம்பதிக்கு இன்பா, தன்மயா என்று ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











