»   »  என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்: முன்னாள் கணவர் பற்றி நடிகை பரபர பேட்டி

என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்: முன்னாள் கணவர் பற்றி நடிகை பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனது வாழ்க்கையை தன் முதல் கணவர் நாசமாக்கிவிட்டதாக நடிகை சார்மிளா தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக நடித்து தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சார்மிளா. கேரளாவை சேர்ந்தவர்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான அவர் தற்போது தனது திருமண வாழ்க்கை குறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

காதல்

காதல்

கடல் படத்தில் நடிக்கும்போது நடிகர் பாபு ஆண்டனி மீது காதல் கொண்டேன். நாங்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தோம். அவர் என்னை பிரிந்து சென்றபோது மனஅழுத்தம் ஏற்பட்டது.

கிஷோர் சத்யா

கிஷோர் சத்யா

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் கிஷோர் சத்யா அடிவாரம் படத்தில் துணை இயக்குனராக இருந்தபோது அவரை எனக்கு தெரியும். அவர் தாய் இறந்த பிறகு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அவர் தான் என் வாழ்க்கையை நாசமாக்கியவர்.

திருமணம்

திருமணம்

திருமணத்திற்கு பிறகு என்னை நடிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவர் ஷார்ஜா சென்றுவிட்டார். இதனால் நான் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்.

விசா

விசா

நான்கு ஆண்டுகள் கழித்து எனக்கு விசா கிடைத்து ஷார்ஜா சென்றேன். நானும், கிஷோரும் ஒருவழியாக சேர்ந்து வாழ்ந்தோம். ஷார்ஜா சென்ற பிறகு எல்லாமே வித்தியாசமாக இருந்தது.

பிரபலம்

பிரபலம்

ஷார்ஜா சென்ற பிறகு தான் கிஷோர் ரொம்பவே மாறிவிட்டது எனக்கு தெரிய வந்தது. அவர் பிரபலமாக என்னை மணந்ததையும் கண்டுபிடித்தேன் என்றார் சார்மிளா.

English summary
Actress Charmila said that it was her first husband Kishore Sathya who spoiled her life in the name of marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil