»   »  முத்தத்தால் பிரிந்த ராக்கி சாவந்த்-மிகா சிங் ஜோடி செல்ஃபியால் இணைந்தது!

முத்தத்தால் பிரிந்த ராக்கி சாவந்த்-மிகா சிங் ஜோடி செல்ஃபியால் இணைந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2006ம் ஆண்டு சண்டை போட்டு பிரிந்த காதலர்களான பாப் பாடகர் மிகா சிங் மற்றும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் விமானத்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்தபடி செல்ஃபி எடுத்து பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பாப் பாடகர் மிகா சிங் மற்றும் நடிகை ராக்கி சாவந்த் இடையே இருந்த காதல் உலகறியும். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, 2006ம் ஆண்டு தனது பிறந்த நாள் விழாவுக்கு வந்த ராக்கியை பொது இடத்தில் கட்டிப்பிடித்து மிகா முத்தம் கொடுக்கப்போக, ராக்கியோ ஐயோ.. அம்மா என அலறி துடித்து காவல் நிலையத்தில் மிகாசிங்கிற்கு எதிராக புகார் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

Kiss Controversy: Mika patches up with Rakhi Sawant

இதன்பிறகு இருவருமே எதிரிகளை போலவே இருந்தனர். ஆனால், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியொன்றில் இருவரும் இணைந்து ஆடியோ கேசட்டை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர். நிருபர்களிடம் மிகா சிங் கூறுகையில் "நானும், ராக்கி சாவந்த்தும் இணைந்து ஒரு பாப் ஆல்பத்தில் நடிக்க உள்ளோம்" என்றார்.

மேலும் விமானத்தில் ஒன்றாக பயணித்து செல்ஃபி படத்தையும் எடுத்து தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். சல்மான் கான் தங்கை திருமணத்தையொட்டி, ஷாருக்-சல்மான் இணைந்தனர். இப்போது ராக்கி-மிகாசிங் இணைந்துள்ளனர். 2014ம் ஆண்டு பாலிவுட்டுக்கு இணைப்பு ஆண்டாக அமைந்துவிட்டது.

English summary
Pop singer Mika Singh and actress Rakhi Sawant enjoyed highest amount of limelight in 2006 when Mika kissed Rakhi at his birthday bash. The incident was followed by a lot of drama from both Mika Singh and Rakhi Sawant, who criticised each other and since then they kept a safe distance from each other too. However, it seems Mika Singh and Rakhi Sawant have forgotten the kiss controversy and the duo have become friends back again.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil