twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பாடல்களை பாடியது இவரா...இதுவரை தெரியலியே...மறைவிற்கு பிறகு கொண்டாடப்படும் கேகே

    |

    சென்னை : பிரபல பின்னணி பாடகர் கேகே, தமிழில் பாடிய பாடல்களின் பட்டியலை பார்த்தால் யாராலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஆனால் அவர் உயிருடன் இருந்த போது, யார் பாடியதென்று தெரியாமல் அதை ரசித்தோம். பாடியவர் இவர் தான், அவர் இன்று நம்முடன் இல்லை என்பதை நினைக்கும் போது நிச்சயம் கண் கலங்காமல் இருக்க முடியாது.

    KKs songs defined the tamil film music era in 2000s

    பிரபல பின்னணி பாடகரான கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் இசைக் கச்சேரியில் பங்கேற்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். பிறப்பால் மலையாளியான இவர், டெல்லியில் வளர்ந்தவர். 1996 ம் ஆண்டு காதல் தேசம் படத்தில் கல்லூரி சாலை பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 11 மொழிகளில் இவர் பாடி உள்ளார்.

     கமல் வர 4 மணி நேர தாமதம்; கொந்தளித்த மலேசிய ரசிகர்கள் - மன்னிப்பு கோரியது ஏற்பாட்டு நிறுவனம் கமல் வர 4 மணி நேர தாமதம்; கொந்தளித்த மலேசிய ரசிகர்கள் - மன்னிப்பு கோரியது ஏற்பாட்டு நிறுவனம்

    53 வயதாகும் கேகே தமிழில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல தமிழில் யுவன்சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். ஆனால் கேகே உயிருடன் இருந்த வரை, அவர் பாடிய பாடல்கள் என தெரியாமலேயே அனைவரும் அதை ரசித்தனர். ஆனால் தங்களின் ஃபேவரைட் பாடலை பாடியவர் கேகே தான் என தெரிந்ததும் இப்போது அனைவரின் மனதும் கனக்கிறது.

    Recommended Video

    Singer KK Passed Away | மேடையில் பாடி முடித்ததும் பிரிந்த உயிர் | #India

    கேகே பாடிய தமிழ் பாடல்களில் சில...

    'காதல் ஒரு தனிக்கட்சி' (ஷாஜஹான்)
    'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்' (உயிரோடு உயிராக)
    'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும் வரை' (செல்லமே)
    'உயிரின் உயிரே' (காக்க காக்க)'
    'என் காதல் சரியோ தவறோ' ( குட்டி)
    'ஒரு புன்னகை பூவே' (12பி)
    'வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே' (தாமிரபரணி)
    'லேலக்கு லேலக்கு லேலா' (ஆதி)
    'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' (மின்சார கனவு)
    'நினைத்து நினைத்துப் பார்த்தேன்' (7ஜி ரெயின்போ காலனி)
    'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது' (காவலன்)
    'காதல் வளர்த்தேன்' (மன்மதன்)
    'அப்படிப்போடு போடு' (கில்லி)
    'நீயே நீயே' (எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி)
    'நிஜமா நிஜமா' (போஸ்)
    'அண்ணனோட பாட்டு' (சந்திரமுகி)
    'அண்டங்காக்கா கொண்டக்காரி'(அந்நியன்)

    90ஸ், 2கே கிட்சின் ஃபேவரைட் பாடலாக மட்டுமல்ல புகழ்பெற்ற ரிங்டோன்களாகவும் இருந்துள்ளன. அப்படிப்போடு பாடல் எந்த அளவிற்கு குத்தாட்டம் போட வைத்ததோ, அதே அளவிற்கு நினைத்து நினைத்து பார்த்து பாடல் மனதை கரைய வைத்து, அனைவரையும் கண் கலங்க வைத்து விடும்.

    English summary
    KK had several importang hits that became a part of tamil pop culture. He had sung the tamil hit number, Appadi podu from Gilli. His career as singer with A.R.Rahnam in the 90s. KK's first hit tamil was the evergreen song, Kalloori salai in Kadhal Desam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X