»   »  சூர்யா, சிம்புவுடன் நேரடியாக மோதும் பாபி சிம்ஹா

சூர்யா, சிம்புவுடன் நேரடியாக மோதும் பாபி சிம்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் இது நம்ம ஆளு, சூர்யாவின் 24 ஆகிய படங்களுடன் பாபி சிம்ஹாவின் கோ 2, மோதப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகின்ற மே 6 ல் இது நம்ம ஆளு, 24, கோ 2 மூன்று படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் மூலம் சூர்யா, சிம்பு இருவருடனும் பாபி சிம்ஹா நேரடியாக மோதவிருக்கிறார்.


சூர்யா

சூர்யா

சூர்யா நடிப்பில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 24. விஞ்ஞானி, பைலட் என்று தோற்றங்களில் வித்தியாசம் காட்டியிருக்கும் சூர்யாவை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் குமார் இயக்கம், ஏ.ஆர்.ரகுமான் இசை ஆகியவை படத்திற்கு பெரும்பலம் சேர்த்திருக்கின்றன.


பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

மற்ற படங்களை விட சூர்யா நீண்ட நாட்கள், பணம், கால்ஷீட் என்று இந்தப் படத்திற்கு ஸ்பெஷல் உழைப்பைக் கொட்டியிருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லர், பாடல்கள் இரண்டுமே லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.இதனால் காட்சிகளின் பிரமாண்டத்தை திரையில் காண ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

3 வருடங்களாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையுடன் இது நம்ம ஆளு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. காதல் முறிவிற்குப் பின் சிம்பு-நயன்தாரா திரையில் நடித்திருக்கும் இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரிக்காகவே பல வருடங்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் 'யூ' சான்றிதழைக் கைப்பற்றியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மே 6 ல் படத்தைத் திரைக்குக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர்.


கோ 2

கோ 2

ஜீவா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த கோ படத்தின் 2 வது பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. ஜிகர்தண்டாவிற்குப் பின் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை சரியாக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் (மே 6 ம் தேதி) படக்குழு வெளியிடுகிறது. படத்தையும், பாபி சிம்ஹாவையும் பிரகாஷ் ராஜ் காப்பாற்றுவாரா? என்பது சந்தேகம் தான்.


ஒற்றுமை

ஒற்றுமை

இது நம்ம ஆளு, 24, கோ 2 மூன்றுமே கிடப்பில் போடப்பட்ட படங்கள் தான். 24, இது நம்ம ஆளு படங்களுடன் கோ 2 வெளியாகும் பட்சத்தில் வசூலில் பின்தங்க நேரிடலாம். எனினும் கடைசி நேரத்தில் சில பல மாறுதல்கள் ஏற்படலாம் என்பதால் வழக்கம் போல நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.


English summary
Sources Said Bobby Simha's Ko-2 Clash with Idhu Namma Aalu and 24.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil