»   »  சன்னி லியோன் 'தரிசனம்'... திக்கு முக்காடிய கொச்சின்!

சன்னி லியோன் 'தரிசனம்'... திக்கு முக்காடிய கொச்சின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சினில் செல்போன் கடையைத் திறக்க வந்த சன்னி லியோனைப் பார்க்க பல ஆயிரம் மக்கள் திரண்டதால் கொச்சி நகரமே திக்குமுக்காடியது.

முன்னர் ஆபாச நடிகையாக இருந்து, இப்போது கவர்ச்சி நடிகையாக மாறியிருப்பவர் சன்னி லியோன். இந்தியாவுக்கு வந்த பிறகு அவரே எதிர்ப்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகிவிட்டது. பாலிவுட்டில் முழுநேர நடிகையாக மாறிவிட்ட அவர், இப்போது ரொம்ப காஸ்ட்லியான நடிகையும் கூட. கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் படங்களில் நடிக்க.

Kochi people surprise Sunny Leone

கடைத் திறப்பு விழாக்களுக்கோ அதை விட அதிகமாக சார்ஜ் பண்ணுகிறார். அந்த வகையில் கொச்சினில் ஒரு செல்போன் கடைத் திறப்புக்கு வந்துள்ளார் சன்னி லியோன்.

சன்னி லியோன் வருவதை அறிந்த மக்கள் பெருமளவு அந்த கடை அமைந்த சாலையில் திரண்டு விட்டார்கள். அந்த சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளே. கொச்சி நகரமே திக்கு முக்காடியது என்றால் மிகையல்ல.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னி லியோன், "கொச்சி நகர மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களின் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ வைத்துள்ளது. கடவுளின் தேசத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது!" என்று கூறியுள்ளார்.

English summary
Sunny Leone has thanked Kochi People for their support during her recent visit

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil