»   »  தனுஷ் பிறந்தநாளில் 'கொடி' பர்ஸ்ட் லுக்?

தனுஷ் பிறந்தநாளில் 'கொடி' பர்ஸ்ட் லுக்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் பிறந்தநாளில் 'கொடி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ்-திரிஷா நடித்திருக்கும் படம் 'கொடி'. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அவர் முதன்முறையாக இரட்டை வேடமேற்று நடித்திருக்கிறார்.


சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


Kodi First Look Release date

'எதிர் நீச்சல்', 'காக்கிச்சட்டை' படங்களைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கியிருக்கும் படமென்பதால், 'கொடி' மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ம் தேதி வெளியிட, படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இருக்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொடிக்கு முன் தனுஷ்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தொடரி' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Dhanush-Trisha Starrer Kodi First Look Release date now Revealed.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil