கொலை டிரைலர் எப்படி இருக்கு...ரசிகர்கள் கொடுத்த ரெவ்யூ என்ன?
சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் த்ரில்லர், டிடெக்டிவ் படமாக கொலை படம் உருவாக்கப்பட்டுள்ளது. விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ள படம்.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
கொலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், சமீபத்தில் கேரக்டர்கள் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் போஸ்டர் பயங்கர பரபரப்பை கிளப்பியது.
கொலை படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்த படம் ஹாலிவுட் த்ரில்லர் படமான 'Knives Out' பட வரிசையில் இடம்பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். கொலை திரைப்படத்தின் கதை ஒரு கொலையை கண்டுபிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.இறுதிவரை அந்த கொலையை யார் செய்தார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும் என படக் குழுவினர் தெரிவித்தனர்.

கொலை எப்போ ரிலீஸ்
கொலை படத்தை செப்டம்பர் 22 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இது உலகத் தரத்திலான த்ரில்லர் படம் என படக்குழுவினர் சொல்லி வந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

கொலை பட டிரைலர்
இந்நிலையில் கொலை படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பிரபல மாடல் அழகி ஒருவர், பூட்டி இருந்த வீட்டிற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை பற்றி கண்டுபிடிக்க வருகிறார் டிடேக்டிவான விஜய் ஆண்டனி. அவருடன் இணைந்து ரித்திகா சிங்கும் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.இதில் திகில், மர்மங்கள் நிறைந்த கதையாக எடுத்திருக்கிறார்கள் என்பது டிரைலரில் நன்றாக தெரிகிறது.

ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு
இந்த டிரைலர் ஹாலிவுட் த்ரில்லர் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் சில காட்சிகள் வெப்சீரிஸ் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. இருந்தாலும் மிரட்டலான இசை, டிரைலரின் வரும் காட்சிகள் கொலையாளி யார்? எப்படி கொலை செய்யப்பட்டிருப்பார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்திருக்கும் என எதிர்பார்ப்பை மனதில் ஏற்படுத்துகிறது என இந்த டிரைலரை பார்த்து விட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யாருப்பா அந்த பொண்ணு?
கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் அந்த மாடல்அழகியாக நடித்துள்ள பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அதிலும் இருபுறமும் ரயில்கள் வேகமாக செல்ல, இடையில் உள்ள சிறிய கேப்பில் அந்த பெண்ணும் அவரது காதலருமு் ஹாலிவுட் காதல் ஜோடி போன்று நின்று ரொமான்ஸ் செய்வது, நிலவு அருகில் நைட் எஃபெக்டில் தேவதை போல் காதலன் தோளில் சாய்ந்து நிற்கும் காட்சிகள், வாவ்... சொல்ல வைக்கிறது.
Recommended Video

மிரட்டி இருக்காங்களே
விஜய் ஆண்டனியின் என்ட்ரி, பிஜிஎம் மியூசிக் ஆகியன வேற லெவலில் மிரட்டலாக உள்ளன. ஹீரோக்களுக்கு அம்மாவாக மட்டுமே பார்த்து பழகிய ரசிகர்களுக்கு ராதிகாவின் இந்த மாடர்ன் லுக் வித்தியாசமான உணர்வை தருகிறது. டிரைலரிலேயே ஆர்வத்தை தூண்டும் வகையில் இத்தனை விஷயம் உள்ளது என்றால் படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்ற ஆர்வமும் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











