ஒரு ட்வீட் போட்டு நாசம் பண்ணிட்டார்: விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடரும் படக்குழு?

By Siva

Recommended Video

விக்னேஷ் சிவன் மீது கொலையுதிர்காலம் படக்குழு வழக்குபதிவு?- வீடியோ

சென்னை: விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து கொலையுதிர்காலம் படக்குழு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார்.

அதை கேட்டு பொங்கி எழுந்த விக்னேஷ் சிவன் கொலையுதிர் காலம் படம் கைவிடப்பட்ட படம் என்று ட்வீட் செய்தார்.

விக்னேஷ் சிவன்

முடிக்கப்படாத படத்திற்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதே எங்களுக்கு தெரியாது. நிஜ தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர் சில ஆண்டுகளுக்கு முன்பே படத்தை விட்டு வெளியேறிவிட்டனர் என்று நினைக்கிறேன். என்ன பேச வேண்டும் என்று தெரியாத தேவையில்லாதவர்களை வைத்துக் கொண்டு தேவையில்லாத நிகழ்ச்சி என்று ட்வீட் செய்தார் விக்னேஷ் சிவன்.

பிரச்சனை

பிரச்சனை

விக்னேஷ் சிவன் ட்வீட்டால் கொலையுதிர் காலம் படத்தை வாங்குகிறோம் என்ற விநியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க ஆர்வம் காட்டிய நிறுவனமும் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டதாம்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் போட்ட ஒரேயொரு ட்வீட்டால் கொலையுதிர் காலம் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர படக்குழு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பட விழா

பட விழா

கொலையுதிர் காலம் படத்தின் ஹீரோயினான நயன்தாரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வராததை சுட்டிக்காட்டி ராதாரவி விமர்சித்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் விழாவுக்கு ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X