»   »  ஐ படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடிய அனிருத்

ஐ படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடிய அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்துக்காக, ஏ.ஆர். ரகுமான் இசையில், இளம் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்துள்ளார்.

இளைய இசையமைப்பாளர்களில் யுவன்ஷங்கர் ராஜா, தமன், விஜய் ஆண்டனி, அனிருத், இமான் ஆகியோர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகின்றனர். அந்த வகையில், டி.இமான் இசையில் என்னமோ ஏதோ படத்திலும், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வடகறி படத்திலும் அனிருத் பாடியிருந்தார்

அதைத் தொடர்ந்து இப்போது, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்திற்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அனிருத்.

ஷங்கரின் ‘ஐ’

ஷங்கரின் ‘ஐ’

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தின் வேலைகள், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விக்ரம், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ரஹ்மான் இசையில் அனிருத்

ரஹ்மான் இசையில் அனிருத்

தனக்கு ஒரு பாடல் பாடி தர வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான், சொன்னதும், கத்தி பட வேலைகளை அப்படியே போட்டு விட்டு, ரஹ்மானின் இசையில் ஓடோடிச்சென்று பாடிக்கொடுத்திருக்கிறார் அனிருத்.

போட்டோ போட்ட அனிருத்

போட்டோ போட்ட அனிருத்

இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமானோடு எடுத்துக் கொண்டு புகைப்படத்தை பதிவேற்றி, அவர் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் ஷங்கரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், ஷங்கர் இதைத் தெரிவித்துள்ளார்.

மனம்கவர்ந்த இசையமைப்பாளர்

மனம்கவர்ந்த இசையமைப்பாளர்

என் மனம்கவர்ந்த இசையமைப்பாளரின் இசையில் பாடியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று தனது மனநிலையை பகிர்ந்து கொண்டுள்ளார் அனிருத். ஷங்கர் சாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
'Why this Kolaveri' fame young music director Anirudh has sung a song in Vikram starrer 'Ai' directed by Shankar in AR Rahman's music.
Please Wait while comments are loading...