twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகேந்திரன் பேசியது குறைவு, படங்கள் பேசியது அதிகம்: பிரபலங்கள் அஞ்சலி

    By Siva
    |

    Recommended Video

    Director Mahendran:பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்

    சென்னை: இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.

    அவரது மறைவு செய்தி அறிந்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

    ஸ்ரீராம்

    #Mahendran
    அவர் பேசியது குறைவு, அவரின் படங்கள் பேசியது அதிகம்.
    எனக்கு அவர் படங்கள் தான் இன்ஸ்பிரேஷன்.
    உதிரிப்பூக்கள் படத்தை பார்த்துவிட்டு நான் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததை எப்படி மறக்க முடியும்
    அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

    பார்த்திபன்

    பலரின் மரணம் வருத்தமளிக்கும்.
    சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு...ஆனால்
    மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது! என்கிறார் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன்.

    சீனு ராமசாமி

    தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது. வரலாறு மறக்க முடியாத இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குநர் மகேந்திரன் அவர்கள். இதய அஞ்சலி சார் என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

    ஏ.ஆர். முருகதாஸ்

    இயக்குநர் மகேந்திரன் சாரின் மரண செய்தி அறிந்து கவலையாக உள்ளது. நீங்களும், உங்களின் படங்களும் என்றும் எங்கள் இதயங்களில் வாழும். ஆத்மா சாந்தியடையட்டும் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட்டியுள்ளார்.

    English summary
    Kollywood is saddened by the demise of legendary director Mahendran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X