»   »  அடுத்தடுத்து மறைந்த ஜாம்பவான்கள்... பெரும் சோகத்தில் கோடம்பாக்கம்!

அடுத்தடுத்து மறைந்த ஜாம்பவான்கள்... பெரும் சோகத்தில் கோடம்பாக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குருபெயர்ச்சி பலருக்கும் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும் என்பார்கள். ஆனால் கோடம்பாக்கத்திலோ அடுத்தடுத்து பெரும் சோகத்தைத் தந்திருக்கிறது.

வியட்நாம் வீடு சுந்தரம், ஜோதிலட்சுமி, பஞ்சு அருணாச்சலம் என மூன்று பெரும் சாதனையாளர்கள் இந்த ஒரே வாரத்தில் மறைந்துவிட்டனர்.

திரையுலகைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் நேரடி சொந்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சினிமாவில் ஏதோ ஒரு துறையில் இருந்தாலே போதும், ஒருவருக்கொருவர் சொந்தக்காரர் மாதிரிதான். அண்ணன், தம்பி, மாமா, மச்சான், சகோதரி என உறவு சொல்லிப் பழகுவார்கள்.

அவர்கள் அனைவருக்கும் இந்த மூன்று ஜாம்பவான்களின் மறைவு பேரிழப்புதான்.

Kollywood lost 3 stalwarts with in a week

வியட்நாம் வீடு சுந்தரத்தை ஒரு பேச்சுக்குக் கூட வெறுத்துப் பேசுவோர் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு முந்தைய தலைமுறையிலிருந்து இந்தத் தலைமுறை வரை இணக்கமாக, வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்தார். இருபது வயது இளைஞர்கள் கூட, 'வியட்நாம் வீடு சுந்தரத்திடம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேசலாம். எல்லாவற்றுக்கும் அவரிடம் தீர்வு கிடைக்கும்,' என்கிறார்கள்.

ஜோதிலட்சுமியின் மறைவை வெறும் கவர்ச்சி நடிகை ஒருவரின் மறைவாக யாரும் பார்க்கவில்லை. எப்பேர்ப்பட்ட திறமையாளர்.... கடைசி மூச்சு வரை தன் வலிகளைக் காட்டிக் கொள்ளாமல் உற்சாகத்துடன் திரையில் வலம் வந்த மன வலிமை படைத்த பெண். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என பல ஜாம்பவான்களுடன் பணியாற்றிய நாட்டியத் தாரகை. பிரமாதமான பரதநாட்டியக் கலைஞர். இன்னும் பத்தாண்டுகள் நடித்திருக்க வேண்டியவர்.

Kollywood lost 3 stalwarts with in a week

பஞ்சு அருணாச்சலம்.... தமிழ் சினிமாவின் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான வரலாறாகத் திகழ்ந்த பெரும் சாதனையாளர். இளையராஜாவை இந்த உலகுக்கு இசைப் பரிசாக அளித்தவர். ஏதோ போகிற போக்கில் அறிமுகப்படுத்தவில்லை. நன்கு திட்டமிட்டு, அவரது பாடல்களின் பெருமை உணர்ந்து அதற்காகவே ஒரு கதையை உருவாக்க வைத்து, தாமே அதைப் படமாகத் தயாரித்தவர். இன்றைக்கெல்லாம் அப்படி ஒரு விஷயத்தைக் கற்பனை செய்ய முடிகிறதா?

Kollywood lost 3 stalwarts with in a week

பஞ்சு அருணாச்சலம் மாதிரி ஒரு ஜாம்பவானை இந்திய சினிமா உலகில் பார்க்கவே முடியாது. ஆனால் அவர் கடைசி வரை எளியோர்க்கும் எளியவராய் வாழ்ந்தார்.

இப்படி மூன்று பெரும் சாதனையாளர்களைப் பறிகொடுத்துவிட்டு திகைப்பில் இருக்கிறது கோடம்பாக்கம்.

English summary
Kollywood is in deep grief after lost three big personalities Vietnam Veedu Sundaram, Jyothilakshmi and Panchu Arunachalam with in a week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil