KPY Bala: திருட்டு ஆம்புலன்சா? எதற்கு இந்த வன்மம்.. கலங்கிய பாலா!

சென்னை: சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான
கேபிஒய் பாலா, ஹீரோவாக 'காந்தி கண்ணாடி' என்கிற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில தினங்களாக பாலா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அவர் செய்து வரும் உதவிகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் உமாபதி, சர்வதேச சக்திகளால் உருவாக்கப்பட்டவர் பாலா என குற்றம்சாட்டி இருந்த நிலையில, அதற்கு பாலா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

என் மீது ஏன் எவ்ளோ வன்மம், நானும் இந்த சர்ச்சை இப்ப முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என பார்த்தேன் . ஆனால, சர்ச்சை முடிவதாகவே தெரியவில்லை. ஒரே ஒரு படத்தில் நடித்தேன். அதுக்குள் இந்தளவு என்னை சர்ச்சைகள் கிளம்பும் என்று நான் சத்தியமா நினைக்கவில்லை. திருட்டு ஆம்புலன்ஸ், நம்பர் பிளேட்டில் பிரச்சனை பன்றாங்க. ஆனால், அந்த அம்புலன்ஸால் எத்தனை பேர் பயன் பெற்றார்கள். அதை பற்றி யாரும் பேசவில்லை. நம்பர் பிளேட்டில் ஒரே ஒரு 'டி' எழுத்து மிஸ்ஸானதால் பாலாவின் முகத்திரை கிழிந்தது, பாலா ஒரு சர்வதேச கைக்கூலி என்று சொல்றாங்க. நான் சர்வதேச கைக்கூலி இல்லை, நான் ஒரு தினக்கூலி.

KPY Bala help controversy

பாலா விளக்கம்: நான் ஹாஸ்பிட்டல் கட்டுவதை பற்றியும் சர்ச்சை கிளப்பி இருக்கிறார்கள். பாலா கிட்ட இவ்ளோ பணம் ஏதுன்னு கேட்குறாங்க. நான் நிகழ்ச்சிக்கு போறேன், ஆங்கரிங் பன்றேன், படம் நடிக்கிறேன், விளம்பரத்தில் நடிக்கிறேன்... என்னுடைய சொந்த பணத்தில் தான் உதவி செய்கிறேன். வெளிநாடு நிகழ்ச்சிக்கும் செல்வதால், வெளிநாட்டில் இருந்து பணம் வருது என்கிறார்கள். இந்த காலத்துல யார் அப்படி பணத்தை கொடுப்பா. எனக்காக வீடு கட்ட வாங்கிய இடத்தில் தான், அமுதவாணன் அண்ணா கிட்ட இருந்து, கொஞ்சம் இடத்தை வாங்கி மருத்தவமனை கட்டி வருகிறேன். என்னை பற்றி இப்படி விமர்சிக்கிறாங்க.

நான் தினக்கூலி: இந்த சர்ச்சையை பார்த்து உதவி செய்ய வேண்டும் என நினைக்கும் இளைஞர்களும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள். நான் உதவி செய்வதை யூட்யூபில் போட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறேன் என சொல்கிறார்கள். நான் யூடியூபில் போடவில்லை, இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் போடுறேன். இன்ஸ்டாகிராமில் பணம் வராது. எனக்கு யூடியூப் கிடையாது. ஆனால், என்னை பற்றி தப்பு தப்பா பேசி பல பேர் சம்பாதிக்கிறார்கள். பிரச்சனை இருக்குறதுனாலத்தான் நல்லது பன்றோம். ஆனால், நல்லது பன்றதே ஒரு பிரச்சனை என்றால், என்னத்த சொல்றதுன்னு தெரியல. விமர்சனத்தை பார்த்து நான் ஓடமாட்டேன், எனக்குன்னு மக்கள் இருக்காங்க, அவங்களுக்காக நான் ஓடிக்கொண்டு தான் இருப்பேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X