»   »  நடிகை கே ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் மரணம்!

நடிகை கே ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு: மூத்த நடிகை கேஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் இன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மரணமடைந்தார்.

கே ஆர் விஜயா சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, 1966-ம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்தார் தொழிலதிபர் வேலாயுதம். பிரபல நிதி நிறுவனமான சுதர்ஸன் சிட் பண்ட்ஸின் சேர்மன் வேலாயுதம்.

KR Vijaya husband passes away

திருமணத்துக்குப் பிறகு மூன்றாண்டுகள் கே ஆர் விஜயா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். மீண்டும் 1969-க்குப் பிறகு தொடர்ந்து நடிக்க மனைவியை அனுமதித்தார் வேலாயுதம்.

சமீப காலமாக அவருக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார் கே ஆர் விஜயா.

இன்று காலை வேலாயுதம் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஆர் விஜயா - வேலாயுதம் தம்பதிகளுக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார்.

English summary
Velayudham Nair, husband of veteran actress KR Vijaya was passed away today at Kozhikode.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil