twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்!

    கேரள உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிருஷ்ணம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    |

    Recommended Video

    Krishnam Movie Hero Interview: நான் படத்துல நடிக்கல, வாழ்ந்திருக்கேன்- கிருஷ்ணம் ஹீரோ சிறப்பு பேட்டி

    சென்னை: கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பக்தி படமாக உருவாகியிருக்கிறது கிருஷ்ணம் திரைப்படம்.

    தமிழ் சினிமாவில் கடவுளையும், ஆன்மீகத்தையும் மையமாக வைத்து நிறைய பக்தி எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த படங்களுக்கு ரசிகர்களிடையே, குறிப்பாக பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்.

    அம்மன், முருகன், ஐயப்பன், சிவன், பெருமாள், இயேசு, நமிகள், சாய் பாபா உள்ளிட்ட கடவுள்களின் சக்திகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் இப்படங்கள் உருவாக்கப்படும். தொலைக்காட்சி சீரியல்களிலும், இதுபோன்ற பக்தி தொடர்களுக்கு நிறைய வரவேற்பு இருக்கின்றன.

    உண்மைச் சம்பவம்:

    உண்மைச் சம்பவம்:

    இந்நிலையில், கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கிருஷ்ணம் என்ற பெயரில் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கேரள மாநிலத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். அந்த குடும்பத்தில் உள்ள அனைவருமே கிருஷ்ண பக்தர்கள்.

    இதயப் பிரச்சினை:

    இதயப் பிரச்சினை:

    அந்த கோடீஸ்வரரின் 3வது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய நீண்ட நேரமாகும். இதனால் நோயாளி உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவுதான். இருந்தாலும் குடும்பத்தினர் குருவாயூர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தனர்.

    மயக்கம்:

    மயக்கம்:

    கேரளாவின் பிரபல டாக்டர் சுனில் தலைமையில் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டாக்டர்கள் துணையுடன் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானது மருத்துவக்குழு. ஆபரேஷன் தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்னர் டாக்டர் சுனில் திடீரென மயக்கம் வந்த விழுந்துவிட்டார்.

    நேரில் நலம் விசாரிப்பு:

    நேரில் நலம் விசாரிப்பு:

    அறுவை சிகிச்சை நடந்து முடிந்த போது குருவாயூரிலிருந்து ஓர் இளைஞன் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தானாம். அதே போல வீட்டுக்கும் வந்து நலம் விசாரித்தானாம். பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் அங்கிருந்து அனுப்பப்படவில்லை என்றார்களாம்.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    அதேபோல் ஹாஸ்பிடலில் இருக்கும்போது குருவாயூரிலிருந்து போன் வந்திருக்கிறது. பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் பேசவில்லை என்றார்களாம். சாட்சாத் கிருஷ்ணன் தான் அந்த போன் பேசியது என கோடீஸ்வரர் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அந்த குருவாயூர் கிருஷ்ணன் தான் அந்த இளைஞனாக வந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    இரு மொழிகளில் திரைப்படம்:

    இரு மொழிகளில் திரைப்படம்:

    இந்த அற்புத அனுபவத்தை உலகுக்குக் காட்ட எண்ணிய அந்த கோடீஸ்வரர், இந்த கதையை மையமாக வைத்து, கிருஷ்ணம் எனும் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். தமிழ்,மலையாள மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் தயாராகியுள்ளது.

    நாயகனாக கிருஷ்ணன்:

    நாயகனாக கிருஷ்ணன்:

    நோயில் பிழைத்த அவரது மகன் அக்ஷய் கிருஷ்ணனை நாயகனாக நடிக்க வைத்துள்ளனர். நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். மற்றும் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு ,வினீத், ராஜீவ் பணிக்கர், ஜெயகுமார் ,அஞ்சலி உபாசனா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் நிஜ வாழ்வில் நடந்த குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்கள் இடம் பெறுகின்றன", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தயாரிப்பு:

    தயாரிப்பு:

    கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு., இசை - ஹரிபிரசாத் , கலை இயக்கம் - போபன், படத்தொகுப்பு - அபிலாஷ் பாலசந்திரன். 'கிருஷ்ணம் ' படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்குப் படம் பிடித்து விட்டது. படத்தை தன் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வெளியிடுகிறார். தெலுங்கு ரிலீஸ் கல்யாணம்.மலையாளம் ரிலீஸ் பி.என். பலராம். மூன்று மொழிகளில் விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

    English summary
    The true incidents that happened in Kerala have become a devotional movie titled 'Krishnam'. The film revolves around the tale of a millionaire and his family with three sons, who are devotees of Lord Krishna.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X