»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஜூன் 12, 2003

கணவர் மீது போலீசில் கே.ஆர்.விஜயா மகள் புகார்

சென்னை:

நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் தனது கணவரிடம் இருந்து பாதுகாப்பு கோரி போலீசாரிடம் புகார்தந்துள்ளார்.

கே.ஆர். விஜயா- வேலாயுதன் நாயர் தம்பதிக்கு ஒரே மகள் தான். அவரது பெயர் ஹேமா (வயது 34). இவருக்கும்அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பிரேமுக்கும் 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சென்னை மதுரவயலில் இவர்கள் வசித்து வருகின்றனர். ஹேமாவுக்கும் பிரேமுக்கும் தகராறு இருந்து வந்ததாகத்தெரிகிறது. இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் ஹேமா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

மதுரவயல் போலீசாரிடம் அவர் கொடுத்துள்ள புகாரில், தனது கணவர் பிரேதம் தன்னைக்கொடுமைப்படுத்துவதாகவும் அவரிடமிருந்து பாதுகாப்பு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பணம் கேட்டு அடிக்கடி ஹேமாவை பிரேம் மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. கே.ஆர். விஜயாவும் அவ்வப்போதுமகளுக்கு பணம் தந்து வந்துள்ளார். மேலும் கணவரை விட்டு இதற்கு முன்பும் ஹேமா பிரிந்து வந்ததாகவும்கே.ஆர். விஜயா தான் பேசி இருவரையும் சேர்த்து வைத்ததாகவும் தெரிகிறது.

இப்போது மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஹேமா. ஆனால், தனது தாயார் கே.ஆர். வீட்டுக்கும்அவர் செல்லவில்லை என்று தெரிகிறது. அங்கு சென்றால் மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்துவிடுவார்கள்என்பதால், அதைத் தவிர்க்கவே கே.ஆர். விஜயாவிடம் ஹேமா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil