Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பார்த்திபன் காலில் விழுந்த கேஎஸ் ரவிக்குமார்.. என்ன காரணம்.. அவரே சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை : நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது இரவின் நிழல் படம்.
சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த
காரணத்திற்காக
அனிருத்தை
திருமணம்
செய்வேன்
-
பாடகி
ஜோனிதா
காந்தி

இரவின் நிழல் படம்
நடிகர் மற்றும் இயக்குநர் ஆர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர்போனவர். இவரது நடிப்பும் சரி, இயக்குமும் சரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இரண்டையும் சமமாக இவர் செய்து வருகிறார். தற்போது இவரது கைவண்ணத்தில் இரவின் நிழல் என்ற படம் உருவாகியுள்ளது.

சிங்கிள் ஷாட் படம்
இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையுடன் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்ற பெருமையும் சேர்ந்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதுவும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

ஆடியோ வெளியீடு
இந்தப் படத்தை தயாரிக்க தமிழில் தயாரிப்பாளர்கள் இதனிடையே நேற்றைய தினம் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஏஆர் ரஹ்மான் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பார்த்திபன் குறித்த காமெடி
நிகழ்ச்சியில் பேசிய கேஎஸ் ரவிக்குமார், இயக்குநர் பார்த்திபன் சினிமாவில் நிறைய பணத்தை போட்டிருக்கிறார், உழைப்பை போட்டிருக்கிறார், நிறைய கிரியேட்டிவிட்டியை போட்டிருக்கிறார். ஆனால் முதல்முறையாக மைக்கை போட்டவுடன் ட்ரெண்ட் ஆகிவிட்டார் என்று சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர்.

பார்த்திபன் காலில் விழுந்த கேஎஸ் ரவிக்குமார்
தான் படத்தை பார்த்துவிட்டதாக தெரிவித்த கேஎஸ் ரவிக்குமார், ஒரு இடத்தில் கட் செய்தது போல தெரிகிறதே என்று பார்த்திபனிடம் கூறியதாகவும் அவர் உடனே மேக்கிங் வீடியோவை காட்டியதாகவும் அதை பார்த்து பிரமித்து அவரது காலில் விழுந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

பார்த்திபன் குறித்து வியப்பு
தான் தெனாலி படத்தில் கமல் சாரை வைத்து ஒரு காட்சியில் சிங்கிள் ஷாட்டை முயற்சித்ததாகவும் அந்த காட்சியை எடுப்பதற்குள் மூன்று டேக் எடுத்ததாகவும் அதற்குள் செட்டில் உள்ள பலரை திட்டி, டென்ஷனாகி பிரச்சினை ஆனதாகவும் தனது சொந்தப் பட நிகழ்வு குறித்து பேசிய கேஎஸ் ரவிக்குமார் இந்த சிங்கிள் ஷாட் படத்தை பார்த்திபன் எப்படி எடுத்தார் என்று தெரியவில்லை என்று தனது வியப்பை தெரிவித்தார்.
Recommended Video

மைக்கை வைத்து காமெடி
இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி மைக் வேலை செய்யாமல் பிரச்சினை செய்தது. இதை பார்த்திபன் சமீபத்திய நிகழ்ச்சியில் மைக்கை வீசிய நிகழ்வுடன் கம்பேர் செய்து பலரும் அவரை கலாய்த்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேச வந்த ஏஆர் ரஹ்மானும் மைக்கை செக் செய்தார். இதையடுத்து அனைவரும் சிரித்தனர். இவ்வாறு நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது.