»   »  ஓஹோ, இது தான் 'குரங்கு கைல பூமாலை'யா?: ஓகே, ஓகே

ஓஹோ, இது தான் 'குரங்கு கைல பூமாலை'யா?: ஓகே, ஓகே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு ஹீரோயின் வித்தியாசமான குணம் கொண்ட நான்கு பேரிடம் சிக்குவதை மையமாக கொண்டது தான் குரங்கு கைல பூமாலை படம்.

ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா ஆகியோரை ஹீரோக்களாக வைத்து ஜி. கிருஷ்ணன் எடுத்துள்ள படம் தான் குரங்கு கைல பூமாலை. படத்தில் சாந்தினி ஹீரோயினாகவும், நிஷா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சரவண சுப்பையா, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் அமீர்ஜான் தயாரித்துள்ளார்.

படத்திற்கு சாய் குருநாத் இசைப்பணியை கவனிக்கிறார்.

காதலி

காதலி

ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கும் ஒருவன் அவளால் ஏமாற்றப்படுகிறான். இதனால் மனமுடைந்த அவன் பல பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை தனது ஆசையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துகிறான்.

காதல்

காதல்

மற்ற ஒருவன் ஒரு பெண்ணை காதலித்து அவளையே திருமணம் செய்ய விரும்புகிறான். மற்றும் ஒருவன் தனது முறைப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்கிறான்.

டைம் பாஸ்

டைம் பாஸ்

நான்காவது நபர் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறான். ஆனால் தனது ஆசைக்கும், டைம் பாஸுக்கும் தினமும் ஒரு பெண்ணை தேடுகிறான்.

நாயகி

நாயகி

வித்தியாசமான குணாதிசயம் கொண்ட 4 பேரிடம் நாயகி சிக்கித் தவிக்கிறார். அந்த நான்கு பேரிடம் இருந்து நாயகி மீண்டாரா? அந்த நான்கு பேரின் உண்மை நிலை என்ன? என்பது உள்ளிட்டவற்றுக்கு விடை அளிக்கும் வகையில் குரங்கு கைல பூமாலை படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Kurangu Kaila Poomalai movie is about a heroine's struggle with four different men with different attitude.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil