வாரிசு படத்துக்காக விஜய் அப்படி பண்ணுவார்ன்னு எதிர்பார்க்கல… குஷ்பு சொன்ன டாப் மோஸ்ட் சீக்ரெட்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் குஷ்பூவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
வாரிசு படத்தில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளது பற்றியும், அவருடன் இணைந்தது நடித்தது குறித்தும் குஷ்பூ மனம் திறந்துள்ளார்.

வாரிசு பொங்கல்
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகியோர் நடிக்க, அவர்களுடன் குஷ்பூவும் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் வாரிசு படத்தில் குஷ்பூ நடிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகத நிலையில், சில தினங்களுக்கு முன்னரே அவரும் கமிட் ஆகியுள்ளது தெரியவந்தது.

விஜய்யுடன் நடித்த அனுபவம்
இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்துள்ளது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள குஷ்பூ, அவரது கேரக்டர் பற்றி மனம் திறந்துள்ளார். அதில், "வாரிசு படத்தில் எனக்கு கேமியோ ரோல் தான், ஆனால் நான் வரும் காட்சிகள் அனைத்தும் விஜய்யுடன் மட்டுமே இருக்கும்" எனக் கூறியுள்ளார். மேலும், "விஜய்யுடன் ஏற்கனவே மின்சார கண்ணா படத்தில் நடித்துள்ளேன். அதுமட்டும் இல்லாமல் அவருடன் நெருங்கிய நட்பு இருப்பதால், வாரிசு படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் எடுத்த ரிஸ்க்
அதேபோல், "விஜய் பிரண்ட்ஸ் படத்தின் ஷூட்டிங்கிற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தபோது, நானும் அங்கு வேறொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். நாங்கள் எல்லோருமே ஒரே ஹோட்டலில் தான் தங்கியிருந்தோம். அப்போது விஜய் எப்படி டெடிக்கேஷனாக இருந்தாரோ, அதேபோன்று தான் இப்போதும் இருக்கிறார். வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால், விஜய் அதை பொருட்படுத்தாமல் ஹை ரிஸ்க் எடுத்து ஒரு சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்" என வாரிசு படத்தின் முக்கியமான ரகசியத்தை உடைத்துள்ளார்.

வாரிசு தரமா இருக்கும்
மேலும், வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களுக்காக தனது உடல்நலம் பற்றி கவலைப்படாமல் விஜய் நடித்ததாகவும் நடிகை குஷ்பூ மனம் திறந்துள்ளார். வாரிசு படத்தின் சண்டைக் காட்சி குறித்து குஷ்பூ கொடுத்துள்ள அப்டேட், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் குஷ்பூ எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளதால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











