»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

குஷி படம் தறிகெட்டு ஒடிக்கொண்டிருக்க, மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறார் நடிகர் விஜய். படம் வெளியானவுடன், படம் அவுட் என்று பலரும்கிண்டலடிக்க சற்று சோர்ந்து போனவர் பதினைந்து நாட்களில் எழுந்து உட்கார்ந்தார்.

லேட் பிக்அப் என்று படம் பரபரப்பானது. இன்று நூறாவது நாள் கொண்டாட்டங்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

குஷியின் வெற்றியால் குஷியான விஜய் ரசிகர்கள் அதை பலவிதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மதுரையில் குஷியின் 110 - வது நாள்வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. விஜய்யும் விழாவில் கலந்துகொண்டார்.

விழவன்று மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றவர் அன்றைய தினம் (24 மணி நேரத்தில்) பிறந்த முப்பத்தைந்து குழந்தைகளுக்கு மோதிரங்களைஅணிவித்தார். அன்று மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தலைவர் தங்கபாண்டியின் திருமணம்.

திருமணத்தில் கலந்துகொண்டவர். குஷி படம் 110 - வது நாள் தாண்டியும் ஒடிக்கொண்டிருப்பது குஷியான விஷயம். இந்த வெற்றிக்கு நான் மட்டும் காரணம்இல்லை. ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு முதல் காரணம். இப்ப நான் ரொம்பவே குஷியா இருக்கேன் என்று உணர்ச்சிவசப்பட்டார்.

Read more about: celebration, kushi, vijay
Please Wait while comments are loading...