twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் படத்திலேயே தேசிய விருது.. கேமராமேன் டூ டைரக்டர்.. இயக்குநர் கேவி ஆனந்த் கடந்து வந்த பாதை!

    |

    சென்னை: பிரபல இயக்குநரான கேவி ஆனந்தின் திடீர் மரணம் தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது.

    Recommended Video

    KV Anand -திற்கு நடந்தது என்ன? முழு விவரம் | #RIPKVAnand

    பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

    உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் கேவி ஆனந்த் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

    முரட்டுத்தனமான லுக்கில் ஹரீஷ் கல்யாண்… வரிந்துகட்டிக்கொண்டு லைக் போட்ட ரசிகைகள் !முரட்டுத்தனமான லுக்கில் ஹரீஷ் கல்யாண்… வரிந்துகட்டிக்கொண்டு லைக் போட்ட ரசிகைகள் !

    சென்னை பூர்வீகமாக

    சென்னை பூர்வீகமாக

    அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை பூர்வீகமாக கொண்டவர் கேவி ஆனந்த். 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி குமார் வெங்கடேசன் அனுசுயா வெங்கடேன் தம்பதிக்கு மகனாக பிறந்தார் கேவி ஆனந்த்.

    மலையேற்றத்தில் ஆர்வம்

    மலையேற்றத்தில் ஆர்வம்

    சென்னையில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை படித்த அவர், லயோலா கல்லூரியில் முதுநிலை படிப்பை நிறைவு செய்தார். மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட கேவி ஆனந்த் கல்லூரி நாட்களில் பல மலையேற்றப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

    போட்டோகிராஃபிலும் ஆர்வம்

    போட்டோகிராஃபிலும் ஆர்வம்

    போட்டோகிராஃப்பியிலும் ஆர்வம் கொண்ட கேவி ஆனந்த் கல்லூரி நாட்களில் தேசிய அளவிலான போட்டோகிராபிபோட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருடைய விஷ்வல் இமேஜ்கள் பல்வேறு விருதுகளை குவித்துள்ளன.

    அதிக போட்டோக்கள்..

    அதிக போட்டோக்கள்..

    தொடர்ந்து கல்கி, இந்தியா டுடே உள்ளிட்ட தேசிய பப்ளிகேஷன்களில் போட்டோகிராஃபராக பணியாற்றியுள்ளார் கேவி ஆனந்த். மிக குறுகிய காலத்திலேயே அவர் எடுத்த போட்டோக்கள் 200க்கும் மேற்பட்ட வார இதழ்களில் கவர் பேஜ்ஜாக இடம் பெற்றது.
    தொடர்நது தமிழ் நாவல்களுக்கு அவருடைய போட்டோக்கள் விளம்பரமாகவும் கவர் பேஜாகவும் இருந்துள்ளது.

    பிசி ஸ்ரீராமால் அழைக்கப்பட்டார்

    பிசி ஸ்ரீராமால் அழைக்கப்பட்டார்

    போட்டோகிராஃபியில் கேவி ஆனந்தின் ஆர்வத்தை பார்த்த பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தன்னுடை உதவியாளராக அவரை ஏற்றுக்கொண்டார். கோபுரவாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா உள்ளிட்ட படங்களில் பிசி ஸ்ரீராமுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் கேவி ஆனந்த்.

    தென்மாவின் கொம்பத்

    தென்மாவின் கொம்பத்

    பிரபல மலையாள இயக்குநரான பிரியதர்ஷன் மோகன் லாலை வைத்து 1994ஆம் ஆண்டு தென்மாவின் கொம்பத்து படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற பிசி ஸ்ரீராமை அணுகினார். ஆனால் அப்போது பல படங்களில் பிஸியாக இருந்த பிசி ஸ்ரீராம், தன்னுடைய அசிஸ்டன்ட்டான கேவி ஆனந்தை பரிந்துரை செய்தார்.

    முதல் படத்திற்கு தேசிய விருது..

    முதல் படத்திற்கு தேசிய விருது..

    இதன் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவுக்கு அறிமுகமானார் கேவி ஆனந்த். இந்தப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பெற்றார் கேவி ஆனந்த். தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக என்ட்ரி கொடுத்த கேவி ஆனந்த், முதல்வன், சிவாஜி உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் என 14 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

    கடைசியாக காப்பான்

    கடைசியாக காப்பான்

    2005 ஆம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கேவி ஆனந்த். தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து காப்பான் படத்தை இயக்கினார் கேவி ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director KV Anand Passes away due to herat attack. He started his journy as a photographer and ended as a Director.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X