Don't Miss!
- Finance
ஆபீஸ் வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக மார்க்.. அப்ரைசலில் TCS வைத்த செக்.. இனி வேற வழி?
- News
விஜயகாந்த் வேற "சைஸா" நுழைந்துட்டாரே.. ஈர்க்கும் ஈரோடு.. அங்கே ஸ்பெஷாலிட்டியே இதான்.. பளபள கட்சிகள்
- Technology
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- Automobiles
பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஒன்றின் ஆயுட்காலம் இத்தனை மணிநேரமே!! தெரியாம போய் டிடிஆர்-கிட்ட மாட்டிக்காதீங்க...
- Lifestyle
பிறப்புறுப்பை சுற்றி இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பாலியல் தொற்றுநோய் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- Sports
72 மணி நேர கெடு.. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. WFI தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
இனிகோ ஆபாசமாக பேசினார்.. பஞ்சாயத்தை கிளப்பிய ஐஸ்வர்யா.. சப்போர்ட்டுக்கு வந்த லக்ஷ்மி பிரியா!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் தமிழ் ஷோவில் நடிகர் இனிகோ பெண்கள் குறித்து அசிங்கமாக பேசினார் என ஐஸ்வர்யா வைத்த குற்றச்சாட்டு காட்டுத் தீ போல சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோ இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
நடிகர் இனிகோவுக்கு எதிராக நெட்டிசன்கள் கிளம்பிய நிலையில், இந்த விவாகரத்தில் சிக்கிய நடிகை லக்ஷ்மி பிரியாவே இனிகோவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மீண்டும் கர்ப்பம்...ஆல்யாவால் ராஜா ராணி 2 சீரியலில் வரப் போகும் மாற்றம் இது தானாம்

சர்வைவர் தமிழ்
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் தமிழ் ஷோவை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். காடர்கள், வேடர்கள் என ஆரம்பத்தில் இரு குழுவாக பிரிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர். பலர் எவிக்ட் ஆகி வெளியேறி உள்ள நிலையில், இனிகோ, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, நாராயணன், அம்ஜத் உள்ளிட்ட சிலர் நிகழ்ச்சியில் தொடர்கின்றனர்.

இனிகோ பிரபாகர்
ரம்மி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான இனிகோ பிரபாகர் இந்த ஷோவில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்த பல டஃப் ஆன போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இனிகோ இன்னமும் நிகழ்ச்சியில் தொடர்கிறார்.

இனிகோ ஆபாசமாக பேசினார்
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லக்ஷ்மி பிரியாவை பின்னாடி இருந்து தூக்கி விட்டது தொடர்பாக பேசும் போது ஆபாசமான வார்த்தையை இனிகோ பிரபாகர் பயன்படுத்தினார். அதெல்லாம் பற்றி பேசினால் ரொம்ப கேவலமாகி விடும் என டிரைபல் பஞ்சாயத்தில் அர்ஜுன் முன்னாடியே பரபரப்பை கூட்டினார் ஐஸ்வர்யா.

தப்பா பேசல
தமிழில் அந்த வார்த்தையை பயன்படுத்தி நான் சொன்னது உண்மை தான். ஆனால், எந்தவொரு தப்பான நோக்கத்துடனும் நான் அதை சொல்லவில்லை. அதெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து இங்கே இப்படி ஐஸ்வர்யா பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என அர்ஜுன் சார் முன்பாக அழுகாத குறையாக இனிகோ பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திட்டிய ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து கொண்டு எப்படி ஒரு பெண் போட்டியாளர் குறித்து ஆபாசமாக பேசுவார் இனிகோ அவருக்கு இந்த சபை நாகரீகம் கூட தெரியாதா என நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வந்தனர். இனிகோவை இந்த ஷோவை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்றும் இப்படியொரு அசிங்கமான பிரச்சனையை எடிட் செய்து தூக்கிப் போடாமல் ஒளிபரப்பி அதை வைத்து டிஆர்பியை தேடும் சர்வைவர் தமிழ் ஷோவையும் தடை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

லக்ஷ்மி பிரியா ஆதரவு
இந்நிலையில், இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட நடிகை லக்ஷ்மி பிரியாவே இனிகோ வேண்டும் என்றோ அல்லது தகாத முறையிலோ அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். இந்த பிரச்சனையை இத்துடன் விட்டு விடுங்கள் என ட்வீட் போட்டு இனிகோவுக்கு சப்போர்ட் செய்தார்.

சைபர் புல்லிங்
ஆனால், நடிகை லக்ஷ்மி பிரியா இனிகோவுக்கு சப்போர்ட் செய்து பேசிய நிலையில், அவர் குறித்தும் தவறாக சித்தரித்து சில விஷமிகள் ஆபாச கமெண்ட்டுகளை அவரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் அடித்து வரும் நிலையில், இந்த சைபர் புல்லிங் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்