»   »  'சொல்வதெல்லாம் பொய்': லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த வேலையை பாருங்க!

'சொல்வதெல்லாம் பொய்': லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த வேலையை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுள் இருக்கான் குமாரு பிரச்சனையை அடுத்து ட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சத்தமில்லாமல் மீண்டும் ட்விட்டருக்கு வந்துவிட்டார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கண்டமேனிக்கு கலாய்த்திருந்தார்.

இதை பார்த்து கடுப்பான லட்சுமி பாலாஜி, ஜி.வி. மற்றும் இயக்குனர் ராஜேஷை ட்விட்டரில் திட்டித் தீர்த்தார்.

சண்டை

சண்டை

பாலாஜியை லட்சுமி ராமகிருஷ்ணன் விளாசியும் அவர் பதில் அளிக்காமல் இருந்தார். ஜி.வி. பிரகாஷ் தான் பதில் அளித்து லட்சுமியிடம் சிக்கிக் கொண்டார்.

திட்டு

திட்டு

பாலாஜி, ஜி.வி., ராஜேஷை திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணனை ஏராளமான ரசிகர்கள் விமர்சித்தனர். இதனால் கோபம் அடைந்த லட்சுமி பதிலுக்கு ட்வீட் மேல் ட்வீட் போட்டார்.

ட்விட்டர்

கடவுள் இருக்கான் குமாரு பிரச்சனையை அடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோப்பட்டு நான் சமூக வலைதளத்தையே விட்டு போகிறேன் என்று கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி ட்வீட்டினார்.

25 நாட்கள்

சமூக வலைதளத்தை விட்டே போகிறேன் என்று கூறிய லட்சுமி 25 நாட்களில் சத்தமில்லாமல் ட்விட்டரை மீண்டும் பயன்படுத்த துவங்கிவிட்டார்.

English summary
Actress Lakshmi Ramakrishnan who left social media on november 23 is back on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil