»   »  நடிகை லலிதா குமாரியின் அண்ணன் மகள் மாயம்: தாய் கண்ணீர்

நடிகை லலிதா குமாரியின் அண்ணன் மகள் மாயம்: தாய் கண்ணீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதா குமாரி ஆகியோரின் சகோதரரின் மகள் அப்ரினாவை 6 நாட்களாக காணவில்லை.

நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரியின் அண்ணன் உதவி இயக்குனர் அருண் மொழி வர்மன். அருண் மொழி வர்மனின் 17 வயது மகள் அப்ரினா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

Lalitha Kumari's niece missing

கடந்த 6ம் தேதி பள்ளிக்கு சென்றவர் மாயமாகியுள்ளார். 6 நாட்களாகியும் அப்ரினாவை கண்டுபிடிக்க முடியவில்லை. பள்ளியை சுற்றி 56 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

ஆனால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் எந்த கேமராவும் வேலை செய்யவில்லை என்று பள்ளி அதிகாரிகள் கூறியதாக லலிதா குமாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களும் அப்ரினாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரை கண்டுபிடித்து தர உதவுமாறு கேட்டுள்ளனர்.

English summary
Actress Lalitha Kumari's niece Abrina is missing since september 6th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil