twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையுலகில் அடுத்தடுத்து சோகம்... இயக்குநர் டிபி கஜேந்திரன் மறைவு... சோகத்தில் ரசிகர்கள்!

    |

    சென்னை: தமிழ்த் திரையுலகில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் டிபி கஜேந்திரன்.

    மினிமம் பட்ஜெட்டில் வசூல் ரீதியான வெற்றிப் படங்களை இயக்கியுள்ள டிபி கஜேந்திரன் இன்று காலமானார், அவருக்கு வயது 68.

    கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த டிபி கஜேந்திரன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

    டிபி கஜேந்திரன் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

     மினிமம் கியாரண்டி இயக்குநர்

    மினிமம் கியாரண்டி இயக்குநர்

    1988ம் ஆண்டு வெளியான வீடு மனைவி மக்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் டிபி கஜேந்திரன். தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், நல்ல காலம் பொறாந்தாச்சு, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மனாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். காமெடி நடிகராகவும் வலம் வந்த டிபி கஜேந்திரன், மினிமம் கியாரண்டி இயக்குநர் என்ற பெயருக்கு சொந்தமானவர். குறைந்த பட்ஜெட்டில் விரைவாக படம் எடுத்து தயாரிப்பாளருக்கு நிறைவான லாபம் கொடுப்பதில் டிபி கஜேந்திரன் கில்லாடி.

     டிபி கஜேந்திரன் மறைவு

    டிபி கஜேந்திரன் மறைவு

    டிபி கஜேந்திரன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் காமெடியாகவும் பேமிலி சென்டிமெண்டலாகவும் இருக்கும். அதேபோல் காமெடி கேரக்டரிலும் ரஜினி, கமல், விஜய், வடிவேலு ஆகியோருடன் கூட்டணி வைத்து சிரிக்க வைத்துள்ளார். முக்கியமாக பம்மல் கே சம்பந்தம் படத்தில் இயக்குநராகவே நடித்து கமலுடன் காமெடி கலாட்டா செய்திருப்பார். இந்நிலையில், சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த டிபி கஜேந்திரன் இன்று உயிரிழந்தார்.

     திரையுலகில் அதிர்ச்சி

    திரையுலகில் அதிர்ச்சி

    டிபி கஜேந்திரன் இயக்கத்தில் கடைசியாக 2010ல் மகனே என் மருமகனே திரைப்படம் வெளியானது. இதில் விவேக் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தார். விவேக் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது டிபி கஜேந்திரனும் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் திரையுலக பிரபலங்களும் டிபி கஜேந்திரன் மறைவால் அதிர்ச்சியில் உள்ளனர்.

     அடுத்தடுத்து சோகம்

    அடுத்தடுத்து சோகம்

    நடிகை ஜமுனா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், இயக்குநர் கே.விஸ்வநாத், டப்பிங் கலைஞர் செல்வராஜ், பரியேறும் பெருமாள் தங்கராஜ், பாடகி வாணி ஜெயராம் வரிசையில் இன்று டி.பி. கஜேந்திரனும் காலமானது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவ்ரது மறைவுக்கு திரைபிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Leading Director TP Gajendran passes away due to ill health, age at 68. TP Gajendran has directed several films including Veedu Manaivi Makkal, Budget Padmanabhan, Bandha Paramasivam, and Cheena Thaana. Film celebrities and fans are mourning his death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X