»   »  அய்யோ நான் மாட்டேன்: வாரிசு நடிகர் படத்தில் நடிக்க மறுத்து தெறித்து ஓடும் நடிகைகள்

அய்யோ நான் மாட்டேன்: வாரிசு நடிகர் படத்தில் நடிக்க மறுத்து தெறித்து ஓடும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வாரிசு நடிகரின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் மறுத்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து ஷூஜித் சர்க்கார் இயக்கும் படம் அக்டோபர். வித்தியாசமான காதல் கதையாக இந்த படத்தை எடுக்க உள்ளார் சர்க்கார்.

சர்க்கார் படத்தில் நடிக்கவிருப்பதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் வருண் தவான்.

ஹீரோயின்

ஹீரோயின்

அக்டோபர் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்குமாறு சர்க்கார் தீபிகா படுகோனேவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டாராம். சர்க்கார் இயக்கிய பிக்கு படம் தீபிகாவின் கெரியரில் முக்கியமான படம். அப்படி இருந்தும் நடிக்க மறுத்துவிட்டார்.

நடிகைகள்

நடிகைகள்

தீபிகா நடிக்க மறுத்ததை அடுத்து சர்க்கார் பாலிவுட்டின் சில முன்னணி நடிகைகளிடம் கேட்க அவர்களும் சொல்லி வைத்தது போன்று முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

ஏன்?

ஏன்?

அக்டோபர் ஹீரோவை சுற்றி நகரும் கதை கொண்ட படமாம். ஹீரோயினுக்கு டூயட் பாடுவதை தவிர பெரிதாக வேலை இல்லையாம். அதனால் தான் முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்துள்ளனர்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

அக்டோபர் படத்தின் ஷூட்டிங் துவங்கியதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை அடியோடு நிறுத்த வேண்டும் என்று சர்க்கார் வருணுக்கு கன்டிஷன் போட அவரும் ஓகே சொல்லியுள்ளார்.

English summary
Leading ladies of Bollywood have refused to act with Varun Dhawan in his upcoming movie October to be directed by Shoojit Sircar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil