»   »  வேல்ஸ், எம்ஜிஆர் பல்கலை.களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி!

வேல்ஸ், எம்ஜிஆர் பல்கலை.களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேல்ஸ் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக் கழகங்களில் நடிகர் சங்க உறுப்பினர்களின் வாரிசுகள் 36 பேருக்கு அவர்கள் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு வழங்கப்படும் என நடிகர் சங்கம் ஏற்கனவே கூறியிருந்தது.

Leading universities give free seats for Nadigar Sangam members

இப்போது நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 36 பேருக்கு அவர்கள் கேட்ட பாடங்களை படிக்க நடிகர் சங்கம் மூலமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் அனைவரும் அவர்கள் விரும்பிய பாடங்களை படிக்க வாய்ப்பளித்த வேல்ஸ் பல்கலைகழகம் வேந்தர் ஐசரி கணேசன், மற்றும் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் வேந்தர் ஏ.சி.சண்முகம் ஆகியோர்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leading universities give free seats for Nadigar Sangam members

மாணவர்களைச் சந்தித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் ஆசைப்பட்டது போலவே விரும்பிய பாடத்தைப் படிக்க அனைவருக்கும் கல்லூரி சீட் கிடைத்ததில் நடிகர் சங்க நிர்வாகிகளாகிய எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து பெரிய அளவில் சாதித்து பெற்றோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

Leading universities give free seats for Nadigar Sangam members

நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர்த்து நீங்கள் சாதைனை புரிந்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் அதேபோல் இலவச கல்வி வழங்கிய நிர்வாகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்," என அறிவுரை வழங்கினார்.

English summary
Vels and MGR Universities have gave 36 free seats to Nadigar Sangam member sons and daughters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil