Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சின்ன விஷயத்திற்கு லீனா ஏன் மீடியாவை பார்த்து குரைக்கிறார்?: சுசி கணேசன் மனைவி
சென்னை: சுசி கணேசன் பற்றி லீனா மணிமேகலை சொல்வது பொய் என்று அவரின் மனைவி மஞ்சரி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுசி கணேசன் தனக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லீனா சொல்வது பொய் என்கிறார் சுசி கணேசனின் மனைவி மஞ்சரி.
இது குறித்து மஞ்சரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

லீனா மணிமேகலை
பாதிக்கப்பட்டவரின் மனைவியாக லீனா மணிமேகலையின் பிரஸ் மீட் வீடியோவை பார்த்தேன். சின்மயி தன்னிடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் என்ன நடந்தது என்ற சாதாரண கேள்வியை கேட்டதற்கு மணிமேகலை மீடியாக்காரர்களை பார்த்து குரைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையாகவே பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் விபரங்களை மீடியாவிடம் தெரிவித்திருக்கலாம். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி கேள்விகள் கேட்க வெட்கம் இல்லையா என்று லீனா கோபப்பட்டு கத்தியதை பார்த்தேன். மீடியாவுக்கு வந்த பிறகு ஆண் என்ன, பெண் என்ன? பொய்களை மறைக்க பெண் என்ற விஷயத்தை பயன்படுத்துகிறார் லீனா.

தைரியம்
தான் ஒரு bisexual என்று தைரியமாகவும், பெருமையாகவும் கூறும் லீனா மணிமேகலை எந்த கேள்விக்கும் தைரியமாக பதில் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் மனைவியாக மீடியா கேட்ட அதே கேள்விகளை நானும் கேட்கிறேன். பேட்டி நடந்த தேதி, நேரம், எவ்வளவு நேரம் நடந்தது, சம்பவம் நடந்த தெருவின் பெயரை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவரின் பொய்களை ஆதரிப்போர் இந்த சாதாரண உண்மைகளை தெரிவிக்குமாறு தயவு செய்து அவரிடம் கேளுங்கள். புரட்சிகரமான கவிஞரான அவருக்கு இது அசவுகரியமான கேள்விகளாக இருக்க முடியாது.

கற்பனை
நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை மனிதர்கள் நன்றாக நினைவில் வைத்திருப்பார்கள். கற்பனை சம்பவத்தை அவரால் 13 ஆண்டுகளாக நினைவில் கொள்ள முடிகிறது என்றால், அது தொடர்பான எளிய விஷயங்களும் நினைவிருக்க வேண்டாமா? அவர் ஒரு #MeTooFraud. மீ டூ இயக்கத்தை அவமதிக்கிறார். மீ டூ இயக்கத்தின் கறுப்பு ஆடு அவர்.
|
மிரட்டல்
தன் மூடை பொருத்து பிற பெயர்களை வெளியிடுவதாக அவர் தனது முதல் பிரஸ் மீட்டில் கூறினார். என் கணவரின் மன உளைச்சலை உலகிற்கு காண்பித்து மற்றவர்களிடம் பேரம் பேசி மிரட்ட முயற்சி செய்கிறாரா அவர்?. போலீஸ், நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை என்று இந்த பெண்கள் பிரஸ் மீட்டில் தெரிவித்துள்ளனர். தற்போது மீடியாவுக்கும் வேறு சாயம் பூசுகிறார்கள். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? லீனா மணிமேகலையை ஆதரிப்போர் தயவு செய்து யோசியுங்கள் என்று தெரிவித்துள்ளார் மஞ்சரி.