Don't Miss!
- News
வந்தே பாரத் ரயிலின் ஸ்மால் வெர்ஷன்.. விரைவில் வருகிறது 'வந்தே மெட்ரோ' இதுல என்ன ஸ்பெஷல்?
- Finance
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம், MIS, முத்த குடிமக்கள் சேமிப்பு பத்திரம்.. பட்ஜெட்டில் பலே அப்டேட்!
- Technology
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆறிலிருந்து அறுபது வரை.. எல்லோருக்குமே தி லெஜண்ட் பிடிச்சிருக்கு.. லெஜண்ட் சரவணாவே போட்ட ட்வீட்!
சென்னை: லெஜண்ட் சரவணன் நடிப்பில் இந்த வாரம் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தை ரசிகர்களும் பொதுமக்களும் கொண்டாடி வருவதாக லெஜண்ட் சரவணாவே தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்களையும் மக்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.
Recommended Video
இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவான தி லெஜண்ட் திரைப்படம் இந்த வாரம் வியாழக்கிழமை 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
விமர்சகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை சொன்ன நிலையில், மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர் என ட்வீட் போட்டு வருகிறார்.
விஜய் படமா.. அய்யோ எல்லாம் வதந்திங்க.. அலறியடித்து ஓடிய டான் இயக்குநர்.. என்ன ஆச்சு தெரியுமா?

தி லெஜண்ட்
இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா, கீத்திகா, ராய் லக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், பிரபு, விவேக், யோகி பாபு, சுமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த வாரம் வெளியானது தி லெஜண்ட் திரைப்படம். டாக்டர் சரவணன் கதாபாத்திரத்தில் சுகர் பேஷண்ட்டுகளுக்கு இலவசமாக மருத்துவம் வழங்க முயற்சிக்கும் ஹீரோவை நல்லது செய்ய விடாமல் மருந்து மாஃபியா செய்யும் சூழ்ச்சியே தி லெஜண்ட் திரைப்படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் வசூல்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், மூன்று நாட்கள் தி லெஜண்ட் திரைப்படம் 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை லெஜண்ட் சரவணனே வெளியிடுவார் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர். படத்தின் பட்ஜெட் 40 முதல் 50 கோடி என்றும் பாடல்களுக்கு பெரிய தொகையை செலவு செய்து பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6ல் இருந்து 60 வரை
தி லெஜண்ட் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் அதிகப்படியான ட்ரோல்கள் குவிந்து வந்த நிலையில், லெஜண்ட் சரவணாவே களத்தில் இறங்கி, படம் நல்லாவே தியேட்டரில் ஓடுகிறது. 6ல் இருந்து 60 வயதினர் என அனைத்து தரப்புக்கும் படம் பிடித்துள்ளது என மக்கள் கருத்து சொல்லும் வீடியோக்களை ஷேர் செய்து புரமோஷன் செய்து வருகிறார்.

ஊர்வசி ரவுத்தேலா ஹேப்பி
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோக்களை ஷேர் செய்து தனது முதல் தமிழ்ப் படம் மற்றும் பான் இந்தியா படமான தி லெஜண்ட் படம் ரிலீஸானது ரொம்பவே ஹேப்பி என பதிவிட்டுள்ளார். மும்பை பிரஸ் மீட்டில் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக கூட லெஜண்ட் சரவணா மாறி விடுவார் என்றும் பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார்.