twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளைஞர்களுக்கு வழி விடுவோமே, அதில் என்ன தவறு... கேட்கிறார் சத்யராஜ்

    |

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் என்ன தவறு எனக் கேட்டுள்ள நடிகர் சத்யராஜ் விஷால் அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார்-விஷால் அணியினர் மோதுகின்றனர். விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், விஷால் அணி வேட்பாளர் அறிமுக கூட்டமும், தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

    அதில், சத்யராஜ், சிவக்குமா, நாசர் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் சத்யராஜ் பேசுகையில்,

    குழப்பம்...

    குழப்பம்...

    நாடக நடிகர், சினிமா நடிகர் என பிரித்து பார்ப்பது தவறு. இரண்டு அணியில் இருப்பவர்களுமே எனது சகோதர, சகோதரிகள், உறாவினர்கள் தான். இதில் எந்த அணிக்கு சப்போர்ட் செய்வது என்ற குழப்பம் எனக்கு இருந்தது.

    மாற்றம் தேவை...

    மாற்றம் தேவை...

    பின்னர் யோசித்து பார்த்து, யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம். ஒரு மாற்றம் வரட்டுமே என இந்த அணிக்கு சப்போர்ட் செய்தேன். மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் என்ன தவறு உள்ளது.

    சிபிராஜ்...

    சிபிராஜ்...

    வீட்டிலேயே எனது மகன் சிபியை வேலை வாங்குபவன் நான். காரணம் அவர் வயதில் சிறியவர். எனவே, வீட்டுப் பொறுப்புகளையே மகன் மற்றும் மகளிடம் தான் ஒப்படைத்துள்ளேன்.

    நம்பிக்கை...

    நம்பிக்கை...

    இளம் நடிகர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இருந்தால் தான் எந்த ஒரு விஷயமும் சரியாக நடக்கும். புதியவர்களிடம் பொறுப்பை நம்பி ஒப்படைக்கலாம் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Sathyaraj says during the press meet - It's time for youngsters to take charge at Nadigar Sangam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X