»   »  ஆஸ்கர் ரேஸில் 'சிங்கம்': அட நெசமாத்தான்யா...

ஆஸ்கர் ரேஸில் 'சிங்கம்': அட நெசமாத்தான்யா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னாது, சூர்யாவின் சிங்கம் ஆஸ்கர் ரேஸில் உள்ளதா என்று வியக்க வேண்டாம். இது ஹாலிவுட் சிங்கம் 'லயன்'.

வரும் 27ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு யார், யாருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கப் போகின்றதோ என்று உலக ரசிகர்கள் நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் லயன் ஹாலிவுட் படம் ஆஸ்கர் ரேஸில் உள்ளது.

 தேவ் பட்டேல்

தேவ் பட்டேல்

ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் பிரபலமான நடிகர் தேவ் பட்டேல் லயன் படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் கடினமாக உழைத்துள்ளார் என இயக்குனர் கார்த் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

 இந்திய வாலிபரின் கதை

இந்திய வாலிபரின் கதை

மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த ஷெரு முன்ஷி கான் தனது 5வது வயதில் அண்ணனை தேடிக் கண்டுப்பிடிக்க ரயில் ஏற குடும்பத்தாரிடம் இருந்து பிரிந்துவிட்டார். அதன் பிறகு கொல்கத்தாவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் இருந்த அவரை ஆஸ்திரேலிய தம்பதி சூ மற்றும் ஜான் பிரையர்லி தத்தெடுத்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர். வாலிபரான பிறகு கூகுள் எர்த் மூலம் தனது குடும்பத்தாரை கண்டுபிடித்தார் சாரு பிரையர்லி என்கிற ஷெரு முன்ஷி கான்.

 லயன்

லயன்

சாரு பிரையர்லி தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகத்தின் அடிப்படையில் தான் லயன் படம் உருவாகியுள்ளது. படத்தில் சூவாக பிரபல நடிகை நிக்கோல் கிட்மேன் நடித்துள்ளார்.

விருது

விருது

ஆஸ்கர் ரேஸில் லயன் படமும் உள்ளது. ஒரு இந்தியரின் கதை பற்றிய படம் ஆஸ்கர் ரேஸில் இருப்பதை நினைத்து சக இந்தியர்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்துள்ளனர்.

English summary
Hollywood movie Lion is in Oscar race. The movie is based on the life of India born Australian Saroo Brierly. Dev Patel portrays the character of Saroo.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil