»   »  ட்விட்டரில் நடிகர் கேஆர்கேவை திட்டிய நடிகை லிசா

ட்விட்டரில் நடிகர் கேஆர்கேவை திட்டிய நடிகை லிசா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தன்னை பற்றி கீழ்த்தரமாக ட்வீட் போட்ட நடிகர் கமால் ஆர் கானை விளாசித் தள்ளியுள்ளார்.

பாலிவுட் நடிகை லிசா ஹேடன் கவர்ச்சியாக நடிக்க தயங்காதவர். குயீன் படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அவர் கடந்த 1ம் தேதி ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இப்படி டங்க் அடிக்க பயிற்சி எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கூடைப்பந்து விளையாட்டில் வரும் கூடையை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்.

இதை பார்த்த பாலிவுட் நடிகர் கேஆர்கே அதாங்க கமால் ஆர் கான் ட்விட்டரில் லிசாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

பார்க்கவா

பார்க்கவா

நான் வேண்டுமானால் கீழே உட்கார்ந்து உங்களை பார்க்கவா என்று கமால் ஆர் கான் ட்விட்டரில் லிசாவிடம் கேட்டுள்ளார்.

லிசா

லிசா

இதை விட கீழ்த்தரமாக இருக்க முடியாது கமால் ஆர் கான். இன்னும் உங்களுக்கு நாற்காலி வேண்டுமா என்று லிசா பதிலுக்கு கேட்டுள்ளார்.

கேஆர்கே

கேஆர்கே

நீங்கள் தான் லிசா எங்கோ தொங்கிக் கொண்டு உங்களை பார்க்குமாறு மக்களிடம் கூறினீர்கள். அதனால் தான் கீழே அமர்ந்து பார்க்கவா என்று கேட்டேன் என கேஆர்கே ட்வீட் செய்துள்ளார்.

யார் ஸ்டார்?

யார் ஸ்டார்?

ட்விட்டரில் உங்களுக்கு எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள், எனக்கு எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் நான் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பது தெரியும். அதனால் மரியாதையுடன் பேசுங்கள் என்று ட்வீட் செய்துள்ளார் கே.ஆர்.கே.

இதே வேலை

இதே வேலை

யாரையாவது நக்கல் அடித்து, வம்புக்கு இழுத்து ட்வீட் செய்வது இந்த கமால் ஆர். கானுக்கு ஒன்றும் புதிததல்ல.

English summary
KRK has done it again in twitter, this time with actress Lisa Hayden. KRK has fought with Lisa in twitter making lewd comments.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil