பிக்பாஸ் சீசன் 5...இந்த வாரம் நாமினேட் ஆனது இவங்க தான்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், இதுவரை 4 பேர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது 14 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

கடந்த வாரம் நெருப்பு சக்திக்கான ஆற்றல் வழங்கப்பட்டது. நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணி, கிச்சன் ஏரியாவை ஆளுமை செய்யும் அதிகாரத்தை பெற்றார். இதனால் பலருடன் அவருக்கு கருத்து வேறுபாடு, மோதல் ஏற்பட்டது.

கேப்டனை மாற்றிய வருண்

கேப்டனை மாற்றிய வருண்

இந்நிலையில் நிகழ்ச்சியின் 29 வது நாளான நேற்று, இந்த வாரத்திற்கான கேப்டன் போட்டியில் சிபி வெற்றி பெற்றார். ஆனால் வருண் தன்னிடம் உள்ள காயின் பவரை பயன்படுத்தி தான் கேப்டனாக விரும்புவதாக தெரிவித்தார். இதனை ஏற்று வருணை, மறு உத்தரவு வரும் வரை பாத்ரூம் கழுவ வேண்டும் என சொல்லி, கேப்டன் ஆக்கினார் பிக்பாஸ்.

நிரூப்பிற்கான வாரம்

நிரூப்பிற்கான வாரம்

இந்த வாரம் பூமியின் ஆற்றலை குறிக்கும் வாரம் என பிக்பாஸ் அறிவித்தார். இதற்கான காயினை வைத்துள்ள நிரூப்பிற்கு பெட்ரூம் ஏரியாவை ஆளுமை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவியாளராக இருக்க அக்ஷரா மறுத்து சண்டை போடுகிறார்.

ஐடியா கொடுக்கும் வருண்

ஐடியா கொடுக்கும் வருண்

ஆனால் அவரை சமாதானப்படுத்தி ஃபன் பண்ண ஐடியா கொடுக்கிறார் வருண். முடியாது என்று சொன்னால் அவனுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து நிரூப் உன்னை வச்சு செய்வான். அதற்கு பதில் அவன் சொல்வதை வேறு மாதிரியாக செய்து அவனை கடுப்பேற்றினால் நன்றாக இருக்கும் என கூறி ஐடியா கொடுக்கிறார் வருண்.

பிரியங்கா - அண்ணாச்சி மோதல்

பிரியங்கா - அண்ணாச்சி மோதல்

அதைத் தொடர்ந்து இமான் அண்ணாச்சி, நிரூப்பின் அனுமதியில்லாமல் பெட்ரூம் ஏரியாவிற்குள் சென்றதால் ரூல் பிரேக் செய்து விட்டதாக பிரியங்கா குற்றம்சாட்டினார். இதனால் இமான் அண்ணாச்சி, பிரியங்கா, வருண் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

வெடி கொளுத்தும் டாஸ்க்

வெடி கொளுத்தும் டாஸ்க்

ஐந்தாவது வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்பதை தீர்மானிக்கும் நாமினேஷன் நடைபெற்றது. இதில் யார் இரண்டு பேர் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்படி காப்பாற்ற நினைப்பவரின் ஃபோட்டோ இருக்கும் வெடியை கொளுத்த வேண்டும் என பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார்.

நாமினேட் ஆனவர்கள்

நாமினேட் ஆனவர்கள்

இதில் மதுமிதா, சுருதி, அபினய், ஐக்கி பெர்ரி, இசைவாணி, பாவனி ரெட்டி, நிரூப், அக்ஷரா ரெட்டி, சிபி ஆகிய 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர் இந்த வாரம் தீபாவளி என்பதால் எலிமினேஷன் இருக்காது என கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் அபினய் அல்லது சுருதி தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என தெரிவித்துள்ளனர்.

அபினய் தான் போகிறாரா

அபினய் தான் போகிறாரா

அபினய் தான் வெளியேற போகிறார் என அதிகமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இசைவாணி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் சிலர் கூறுகிறார்கள். சுருதி வெளியேறினால் நன்றாக இருக்கும் என சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X