Don't Miss!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கைதியை காட்டிலும் 10 மடங்கு அதிகம்.. கைதி 2 குறித்து தயாரிப்பாளர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை :நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது கைதி படம்.
இந்தப் படத்தில் கெட்டப்பை மாற்றி கார்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சிறையில் இருந்து ரிலீசாகி வரும் கைதியாக மிரட்டியிருந்தார்.
சிறையில் இருந்து வெளிவரும் ஒரு கைதி, பெரிய கேங்கை பிடிக்க போலீசாருக்கு உதவுவதை மையமாக வைத்து இந்தப்படம் வெளியானது.
முதல்ல
சிதம்பரம்..
இப்போ
திருப்பதி..
என்ன
ஒரே
ஆன்மீக
பயணமா
இருக்கு..
லோகேஷிடம்
ரசிகர்கள்
கேள்வி!

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்திற்கு பிறகு முரட்டுத்தனமான லுக்கில் நடித்து வெளியான படம் கைதி. தற்போது மீண்டும் விருமன் படத்தில் இதேபோல முரட்டுத்தனமாக லுக்கில் கார்த்தியை பார்க்க முடிகிறது. இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கைதி படத்தில் கார்த்தி
முன்னதாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படத்திலேயே கார்த்தி நடித்திருந்தார். அப்போது அவரது மாநகரம் படம் மட்டுமே ரிலீசாகியிருந்தது. ஆயினும் அவர்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. அந்த நம்பிக்கையை லோகேஷும் சிறப்பாக பூர்த்தி செய்திருந்தார்.

விக்ரம் படத்தில் கைதி லீட்
படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்திருந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தில் கைதி 2 படத்திற்கான லீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தன்னுடைய மகளுடன் கார்த்தி வாழ்ந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவரை திரையில் காட்டாமல் அவரது குரல் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது.

தளபதி 67 படம்
தற்போது மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து கைதி 2 அல்லது விக்ரம் 3 படத்தில் அவர் இணைவார் என்று முன்னதாக கூறப்பட்டது.

கைதி 2 படம்
இதனிடையே விஜய் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்குவார் என்று அதன் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் கைதி படத்தை போல 10 மடங்கு அதிகமான பட்ஜெட்டில் கைதி 2 படம் உருவாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கைதியாக கார்த்தி
கைதி படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். வெறுமனே அவர் சிறையிலிருந்து வெளிவரும் கைதியாகவே அந்தப் படத்தில் காட்டப்பட்டிருந்தார். ஆனால் அவரது கையில் ஒரு பை இருக்கும், அதில் என்ன இருக்கிறது என்பது காட்டப்படாமலேயே கதை முடிக்கப்பட்டிருந்தது.
|
கைதி 2 படத்தில் கார்த்தி
இதை தான் கைதி படத்தில் வெளிப்படுத்தவில்லை என்றும் அது தற்போது கைதி 2 படத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும் லோகேஷ் கூறியுள்ளார். கைதி 2 படத்தில் கார்த்தியின் முந்தைய வாழ்க்கை மற்றும் ஜெயில் வாழ்க்கை காட்டப்படும் என்று தெரிகிறது. இதனிடையே விஜய் படத்தை அடுத்து லோகேஷ் கைதி 2 படத்தை இயக்குவார் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.