twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மாஸ்டரி'ல் மிகவும் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல்!

    By
    |

    சென்னை: மாஸ்டர் படத்தில் மிகவும் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்று அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

    மாநகரம், கைதி படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம், மாஸ்டர்.

    கமல் சொன்ன ஒத்த வார்த்தை.. தரையில் விழுந்து கதறியழுத பாலாஜி.. பதறி வந்த ஆரி.. அதிரடி ப்ரோமோ !கமல் சொன்ன ஒத்த வார்த்தை.. தரையில் விழுந்து கதறியழுத பாலாஜி.. பதறி வந்த ஆரி.. அதிரடி ப்ரோமோ !

    விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயின். விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

    கல்லூரி பேராசிரியர்

    கல்லூரி பேராசிரியர்

    நடிகை, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

    பொங்கல் ரிலீஸ்

    பொங்கல் ரிலீஸ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

    அதிக எதிர்பார்ப்பு

    அதிக எதிர்பார்ப்பு

    வரும் 13 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ரசிகர்களும் திரைத்துறையினரும் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படத்துடன் சிம்புவின் ஈஸ்வரன் படமும் ரிலீஸ் ஆகிறது. இதை சுசீந்திரன் இயக்கியுள்ளார். நிதி அகர்வால், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    ரசிகர்கள் கூட்டம்

    ரசிகர்கள் கூட்டம்

    கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல், பெரிய ஹீரோ படம் 'மாஸ்டர்' என்பதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 'மாஸ்டர்' படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வந்தால், அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து வருவார்கள் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

    கதை சொன்னேன்

    கதை சொன்னேன்

    இந்நிலையில், இந்தப் படம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது: 'கைதி' படப்பிடிப்பின்போது விஜய்க்கு மாஸ்டர் கதையை சொன்னேன். அவருக்கு பிடித்தது. விரைவாக ஷூட்டிங்கை முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். கொரோனாவால் தாமதமாகி பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

    மகிழ்ச்சி அனுபவம்

    மகிழ்ச்சி அனுபவம்

    விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்தின் கதை, சென்னை, நாகர்கோவில், காரைக்குடி பகுதிகளை மையமாக வைத்து நடக்கிறது. பாதி விஜய் படமாகவும், பாதி எனது படமாகவும் இருக்கும். விஜய் ரசிகர்களை, மாஸ்டர் படம் திருப்திப்படுத்தும்.

    மோசமான வில்லன்

    மோசமான வில்லன்

    விஜய்க்கு இணையான வேடத்தில் விஜய் சேதுபதி, மோசமான வில்லனாக நடித்து இருக்கிறார். அந்த கேரக்டரில் அவர் நடிப்பாரா என்று விஜய்க்கு சந்தேகம் இருந்தது. அவர் சம்மதித்ததில் மகிழ்ச்சி. படத்தில் இருவரும் சந்திக்கிற காட்சிகள் மிரட்டலாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Lokesh Kanagaraj has assured that Master will be a treat for Vijay fans as well as the general audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X