லோகேஷ் கனகராஜை ஆச்சரியப்பட வைத்த அந்த நடிகர்...தளபதி 67 க்கு புக் பண்ணிட்டார்
சென்னை : கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யாவை வைத்து விக்ரம் படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அடுத்து இவர் எப்போது படம் பண்ணுவார்? அதன் அறிவிப்பு எப்போது வரும் என்று தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த படம் விஜய் நடிக்கும் தளபதி 67 தான் என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கன்ஃபார்ம் செய்து விட்டார். இதனால் அவரை பார்ப்பவர்கள் அனைவரும் தளபதி 67 படம் பற்றி அப்டேட் கேட்டு வருகின்றனர்.
இதனால் சோஷியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இதுவரை தளபதி 67 படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

தளபதி 67 அறிவிப்பு எப்போ வரும்?
தளபதி 67 படத்தின் அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவைர வெளியான தகவல்களின் படி மாஸ்டர் படத்தை துவங்கிய அக்டோபர் மாதத்தில் சென்டிமென்ட்டாக தளபதி 67 படத்தையும் துவக்குவார்கள் அல்லது அறிவிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இவரும் வில்லன்களில் ஒருவரா
இதற்கிடையில் தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் இருப்பதாகவும், சஞ்சய் தத், ப்ருத்விராஜ் ஆகியோர் வில்லன் ரோல்களுக்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவரும் வில்லன்களில் ஒருவரா என தெரியவில்லை.

யாருப்பா ஹீரோயின்
தளபதி 67 ஹீரோயின்களாக சமந்தா, த்ரிஷா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் சமந்தா நெகடிவ் ரோல் பண்ணுவதாக ஒரு தகவலும், போலீஸ் ரோலில் நடிப்பதாக ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. இதனால் உறுதியாக தெரியவில்லை என்றாலும் வேறு யாரெல்லாம் தளபதி 67 படத்தில் நடிக்கிறார்கள், அடுத்த தகவல் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

லோகேஷ் கனகராஜ் ஆச்சரியப்பட்ட நடிகர்
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி லோகேஷ் கனகராஜிடம் ரசிகர் ஒருவர், மன்சூர் அலி கான் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லோகேஷ், நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் என்றால் நான் உங்களை பார்த்து பதில் சொல்கிறேன். ஆனால் அவரிடம் கேள்வி கேட்டால், எங்கோ பார்த்துக் கொண்டு, மரத்தில் இருந்து இலையை பறித்து பீப்பீ ஊதிக் கொண்டு பதில் சொல்வார். இது மாதிரி நான் யாரையும் பார்த்தது கிடையாது.

தளபதி 67 ல் அவர் இருக்காரா
எனக்கு தெரிந்து கோடியில் ஒருவரால் மட்டும் தான் இப்படி நடந்து கொள்ள முடியும். டிவி நிகழ்ச்சிகளில் விவாதங்களில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவர் இப்படி தான் நடந்து கொண்டுள்ளார். அவரும் சொல்லி உள்ளார். இது எல்லாமே எனக்கு இன்ஸ்பையரிங்காக உள்ளது. அவருக்கு ஏதாவது எழுத வேண்டும் என நினைத்துள்ளேன். நான் அடுத்து எடுக்க போகும் படத்தில் அவருக்கு பெரிய கேரக்டர் உண்டு என தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ்.

அப்போ செமையா இருக்குமே
இதனால் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு வெயிட்டான ரோல் இருப்பதை லோகேஷ் கனகராஜே கன்ஃபார்ம் செய்து விட்டதால் ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். கடந்த சில வாரங்களாகவே மன்சூர் அலி கான் டான்ஸ் போன்றவைகள் டிரெண்டாகி வரும் நிலையில் அவர் தளபதி 67 படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











