தளபதி 67 பட பூஜையில் லோகேஷ் கொடுத்த ஹின்ட்.. கண்டிப்பா அப்போ இது LCU தானா? சீக்கிரம் சொல்லிடுங்க!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் பூஜை வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே சென்னையில் போடப்பட்ட நிலையில், அந்த படத்தின் ஓட்டத்துக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காக பொறுமையாக வெயிட் பண்ண நிலையில், நேற்று அதிரடியாக வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தளபதி 67 பட பூஜையில் ஒட்டுமொத்த ஸ்டார் காஸ்ட் கூட பங்கேற்கவில்லை என்பது மேலும், ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை அளிக்கிறது. அந்த அளவுக்கு பாதுகாத்து வைத்த ரகசியங்கள் விமான டிக்கெட் விவரங்கள் கசிந்ததால் அப்டேட்டாக மாறிவிட்டன.
இந்நிலையில், தளபதி 67 படம் LCU தான் என ரசிகர்கள் கண்டுபிடிக்க பூஜை வீடியோவில் சில ஹின்ட்டுகளையும் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து பதிவிட்டு வருகின்றனர்.
த்ரிஷா தோளில் கைபோட்டு
நடிகை சிம்ரனை தொடர்ந்து அதிக முறை விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை என்கிற வாய்ப்பை த்ரிஷா பெற்றுள்ளார். தளபதி 67 பட பூஜையில் நடிகை த்ரிஷாவை பார்த்ததும் வணக்கம் வைத்து அவரது தோளில் கை போட்டு இந்த படத்திலும் ஜோடி நீங்க தான் என சிரித்து பேசிய காட்சிகள் இடம்பெற்று விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின.
காரப்பொறி வேணும்
மேலும், விஜய் மற்றும் த்ரிஷா பேசும் காட்சிகளை கில்லி படத்தில் விஜய்யிடம் த்ரிஷா கிளைமேக்ஸில் காரப்பொறி வேணும் என கேட்கும் வசனத்துடன் மிக்ஸ் செய்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி என இதுவரை 4 படங்களில் விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்த த்ரிஷா 5வது முறையாக தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆகி உள்ளார்.

கோட் ரெட்
தளபதி 67 படத்தின் காஸ்ட் அறிவிப்புகளில் அதிகமாக ரத்த சிவப்பு நிற டிசைன் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் Code Red ஹின்ட்டை எவ்வளவு தைரியமாக தலைவன் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார் பாருங்க, கண்டிப்பாக இது LCU படம் தான் என கன்ஃபார்ம் செய்து வருகின்றனர்.

கைதி நெப்போலியன்
அதுமட்டுமின்றி தளபதி 67 படத்தின் பூஜையில் கைதி படத்தில் நெப்போலியனாக நடித்து அசத்திய நடிகர் ஜார்ஜ் மரியன் கலந்து கொண்டது மட்டுமின்றி கடைசியாக படக்குழுவினர் மட்டும் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலும் ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் அருகே நின்றபடி போஸ் கொடுத்துள்ளதை சுட்டிக் காட்டி கைதி நெப்போலியனும் இருக்காரு அப்போ இது கன்ஃபார்ம் தளபதி 67 தான் என அதிரடியாக கமெண்ட்டுகளை போட்டு கெஸ்ஸிங் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர்.

மாஸ்டர் படத்திலேயே
நடிகர் ஜார்ஜ் மரியன் விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மாஸ்டர் படத்திலேயே கிளைம்கேஸில் விஜய் சிறையில் இருக்கும் காட்சியில் ஜார்ஜ் மரியனை காட்டியிருப்பார்கள். அந்த காட்சியையும் எடுத்துப் போட்டு மாஸ்டர் கிளைமேக்ஸ் காட்சி ஜேடி கனெக்ஷன் மற்றும் தளபதி 67 படத்தின் அறிவிப்புடன் கூடிய காப்பு சீன் என அனைத்துமே இந்த படம் எல்சியூ தான் என்பதை உறுதி செய்வதாகவே ரசிகர்கள் கணித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக இது எல்சியூவா இல்லையா என்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜே விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











