தளபதி 67 படத்தில் த்ரிஷா...லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஹின்ட்டா இது?
சென்னை : விஜய்யின் 67வது படத்தில் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைய உள்ளதை அவரே கன்ஃபார்ம் செய்து விட்டார். ஆனால் தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
Recommended Video
ஆனாலும் தளபதி 67 படம் பற்றி தொடர்ந்து பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. விஜய் பிறந்தநாளன்றே தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்படி ஜுலை 30 ம் தேதிக்கு பிறகு அவர் ட்விட்டரில் எந்த பதிவையும் பகிரவில்லை.

தளபதி 67 கதையா இது
இந்நிலையில் தளபதி 67 படம் மும்பை கேங்ஸ்டர் பற்றிய கதை. இதில் 50 வயது தாதாவாக விஜய் நடிக்கிறார். படத்தின் ஷுட்டிங்கை மும்பையில் நடத்துவதற்கான லோகேஷன் பார்க்கும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

விஜய்க்கு 6 வில்லன்கள்
அதோடு தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் நடிப்பதாகவும், சஞ்சய் தத், ப்ருத்விராஜ் ஆகியோருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் மற்றொரு வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. மன்சூர் அலி கான் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

லோகேஷ் கொடுத்த ஹின்ட்
ஹீரோயின்களாக சமந்தா, த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும், 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக பரபரப்பாக மீடியாக்களில் தகவல் பரவியது. இது உண்மை தான் என உறுதி செய்யும் வகையில், லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இருந்து விலகுவதற்கு முன் த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்துள்ளார்.

லோகேஷ் இப்போ செம பிஸி
இதனால் தளபதி 67 படத்தில் த்ரிஷா இருக்கிறார் என்பதற்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஹின்ட் தானா இது என தற்போது நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தின் கதையை தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் இணைய போகும் ஜோடி
லோகேஷ் கனகராஜ் மறைமுகமாக த்ரிஷா இருப்பதை கன்ஃபார்ம் செய்ததால் விஜய் - த்ரிஷா ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் ஃவேபரைட் ஜோடியாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











