Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விரைவில் ‘தளபதி 67‘ பற்றி சொல்கிறேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. லோகேஷ் கனகராஜ்!
சென்னை : கல்லூரி விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படம் பற்றி விரைவில் சொல்கிறேன் கொஞ்ச நாள் காத்திருங்கள் என்றார்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும்
வருகிறேன்..சமூகவலைத்தளங்களிலிருந்து
விலகிய
லோகேஷ்
கனகராஜ்..இது
தான்
காரணமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கான பாதையை உருவாக்கி கமலுடன் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார்.

விக்ரம்
கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி இந்திய அளவில் லோகேஷ் கனகராஜ் பேசப்பட்டார். விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ள கூறப்படுகிறது.

சிறப்பு விருந்தினராக
இன்று தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம், கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கலந்துரையாடல் தொடங்கும் முன்பே தளபதி 67 குறித்து எதுவும் கேட்க வேண்டாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். மாணவர்கள் வேறு என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறியிருந்தார்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
அப்போது ஒரு மாணவி, மாணவர்கள் அனைவருமே உங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் ஆரம்பத்திலிருந்து எடுக்கும் மாநகரம்,கைதி,மாஸ்டர், விக்ரம் என அனைத்தும் மிரட்டலா இருக்கு.நீங்கள் அடுத்து எடுக்கும் படத்தில் நடிக்கக்போகும் ஹீரோ, ஹீரோயின் பற்றி சொல்லுங்க என்றார். இதற்கு பதிலளித்த லோகேஷ், தயாரிப்பு தரப்பிலிருந்து எதுவும் சொல்லாமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க சொல்லிவிடுகிறேன் என்றார்.