twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    |

    சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆகும் என அந்த படத்தின் தயாரிப்பு தரப்பு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மாஸ்டர் படம் ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் பெரிய சலசலப்பு உண்டானது.

    ஆனால், மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என திட்டவட்டமாக மாஸ்டர் படக்குழு அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    எல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ!எல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ!

    திண்டாடும் தியேட்டர்கள்

    திண்டாடும் தியேட்டர்கள்

    தீபாவளிக்கு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற பெரிய படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகின. அதனால், தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதவில்லை. மேலும், கொரோனா பரவல் காரணமாக 50 சதவீதம் இருக்கை மட்டுமே என்பதால், ஏகப்பட்ட தியேட்டர்கள் மூடும் நிலையில் உள்ளது.

    ஒரே நம்பிக்கை மாஸ்டர் தான்

    ஒரே நம்பிக்கை மாஸ்டர் தான்

    இந்நிலையில், மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியானால் மட்டும் தான் தளபதி ரசிகர்கள் தினமும் தியேட்டரில் கூடி தியேட்டர்களை பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும் என ஏகப்பட்ட தியேட்டர் அதிபர்கள் மாஸ்டர் ரிலீசை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    ஒடிடிக்கு விற்கப்பட்டதாக

    ஒடிடிக்கு விற்கப்பட்டதாக

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாஸ்டர் திரைப்படம் ஒடிடிக்கு விற்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்கிற தகவல் வைரலானது. அதை அறிந்த தியேட்டர் அதிபர்களும், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ரசிகர்கள் பிடிவாதம்

    ரசிகர்கள் பிடிவாதம்

    மாஸ்டர் படத்தை வாங்க அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருவது உண்மை தான். ஆனால், நெட்பிளிக்ஸிற்கு மாஸ்டர் விற்கப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து அப்செட்டான தளபதி ரசிகர்கள், மாஸ்டர் படம் தியேட்டரில் மட்டும் தான் வெளியிட வேண்டும் என ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்தனர்.

    கண்டிப்பா தியேட்டரில் தான்

    கண்டிப்பா தியேட்டரில் தான்

    இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, வைரலாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என்று அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தியேட்டர்கள் எதிர்காலம் கருதி

    தியேட்டர்கள் எதிர்காலம் கருதி

    தியேட்டர் அதிபர்கள் 75 சதவீதம் ஆட்களை தியேட்டர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசிடம் வைத்து வருகின்றனர். வரும் ஜனவரி மாதம் தியேட்டர்களின் இருக்கை எண்ணிக்கை அதிகரித்தால், மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர் அதிபர்கள் படக்குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் லோகேஷ் வைத்துள்ளார்.

    Recommended Video

    அது தளபதிக்கு ரொம்ப புடிக்கும் |CLOSE CALL WITH SINGER V.V.PRASANNA PART-03| FILMIBEAT TAMIL
    ரசிகர்கள் ஹேப்பி

    ரசிகர்கள் ஹேப்பி

    மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் ரிலீஸ் இல்லை, தியேட்டரில் தான் என்கிற அறிவிப்பை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். கண்டிப்பா நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரில் ரிலீஸ் என்று சொன்ன லோகேஷ், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    English summary
    Lokesh Kanagaraj officially confirmed Master only in theaters and not in OTT. Vijay fans and theater owners gets rejoice after hearing the official confirmation from Master team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X