Lokesh Kanagaraj: கூலி அடிவாங்கினாலும்.. கைதி 2 சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்..
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்த பேச்சுகள் கூலி படம் வெளியான பின்னர் அதிகமாகிவிட்டது. அதுவும் படம் சுமார் தான் என்று ஆன பின்னர் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். என்னதான் ரசிகர்கள் விமர்சித்தாலும், அவரது எல்.சி.யூ படம் என்றால் அனைவரும் சரண்டர் எனக் கூறும் அளவுக்கு எல்.சி.யூவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இப்படி இருக்கும்போது அவரது கைதி 2 படத்திற்கான சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூலி படத்தில் கமிட் ஆனதுமே லோகேஷ் கனகராஜ் எடுத்த தீர்க்கமான முடிவு, கூலி வெளியானதும், உடனே கைதி 2 படத்தின் வேலைகளை தொடர்வதுதான். இந்த படம் அவரது எல்.சி.யுனிவர்ஸில் இருக்கும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் இடம் பெறும் படமாக இருக்கும் என்று அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

கைதி படத்தில் கார்த்தி சிறப்பாக நடித்திருப்பார். இதனால் கைதி 2 படத்தில் கதாநாயகனாக கார்த்தி இருந்தாலும், வில்லனாக அவரது அண்ணன் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல், கமல்ஹாசனும் இந்த படத்தில் நடிப்பார் என்பதால் படத்தின் மீதான ஹைப் உச்சகட்டத்தில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் லியோ படமும் இருப்பதால், கைதி 2 படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது ஏதாவது ஒரு காட்சியில் அவரது குரல் மட்டும் இடம் பெறுவதைப் போல இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.
கைதி 2: கூலி படம் விமர்சன ரீதியாக அடிமேல் அடி வாங்கிக் கொண்டு வந்தாலும், லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போதே, கைதி 2 படத்தில் கமிட் ஆகிவிட்டார். கூலி படத்திற்கே லோகேஷ் கனகராஜ்க்கு ரூபாய் 50 கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது கைதி 2 படத்திற்கு ருபாய் 75 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். முதலில் தயங்கிய ட்ரீம் வாரியஸின் எஸ்.ஆர். பிரபு தரப்பு அதன் பின்னர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். தற்போது கூலி படம் அடிமேல் அடி வாங்கிக் கொண்டு உள்ளதால், அது கைதி 2 படத்தின் பிசினஸையும் பாதிக்கும் என ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தரப்பில் யோசிப்பதாக கூறப்படுகிறது.

சம்பளம்: இதனால், லோகேஷ் கனகராஜிடம் அவரது சம்பளம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு வருகிறார்களாம். அதாவது லோகேஷ் கனகராஜிடம் பேசி கிட்டத்தட்ட 15இல் இருந்து 20 கோடிகளை குறைக்கச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுளார்களாம். ஒருவேளை லோகேஷ் கனகராஜ் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால்ம், ரூபாய் 30 கோடிகள் சம்பளமாக கொடுத்துவிட்டு, லாபத்தில் பங்கு கொடுத்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளார்களாம்.
பணமழை: எப்படிப் பார்த்தாலும் லோகேஷ் கனகராஜின் காட்டில் பணமழை உறுதி ஆகிவிட்டது. இது மட்டும் இல்லாமல் கூலி படத்தில் பணியாற்றாமல் இருந்த அவரது நண்பர் ரத்னகுமார் கைதி 2 படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளார் என்ற தகவலே மொத்த திரையுலகிலும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இது கார்த்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











